ஆசிரியர் பக்கம்

பேரன்புடையீர்!

வணக்கமும் வாழ்த்தும், பரம் பொருளின் கருணையாலும் குருநாதர் அருளாலும் நன்மையே நடக்கட்டும். சத்தியத்தின் வலிமையையும், நேர்மையின் வெற்றியையும், அன்பின் அற்புதத்தையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவன் கருணாமூர்த்தியாக இருப்பதால்தான் நீங்களும் நானும் தேவையான காற்றும், நீரும் பெற்று வாழ்கிறோம். அது மட்டுமா உழைப்பையும், உழைப்புக்கான ஊதியத்தையும், உணவையும் உவந்து அளிக்கிறான்.

எடுத்த பணியினை ஏற்றமுற முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள். உங்களை குறை கூறுவோர் கூறும் கருத்துக்களையும் கவனியுங்கள். ஏற்றமுடை கருத்தாயின் ஏற்று உங்களை சரியான பாதையில் செலுத்திடுங்கள். குருநாதரை பணிந்திடுவோம். அவர்தம் அருள் நூல்களை பயில்வோம்; பயில்விப்போம், இந்த வழியில் நாம் சென்றால் வெல்வது உறுதி!

குருநாதர் புகழ் பரப்பும் பணியில்
குகஸ்ரீ வீ.கலைச்செல்வன்
சிறப்பாசிரியர்

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt