இருமயில் தோற்றமும் இணையிலாக் காட்சியும் (மயூரவாகனசேவனம்)

சுவாமிகள் சிகிச்சைக்காகப் பொது மருத்துவமனையில் தங்கியிருந்த 11வது நாள் இரவு ஆசிரியர் படுக்கையிலிருந்தபடியே ஓர் அற்புத காட்சி கண்டார். குமாரபகவானின் வாகனமாகிய இரு மயில்கள் மேற்கு திசையிலிருந்து நடனமாடிக் கொண்டு வருகின்றன. வலப்பக்கம் வந்த பெரியமயிலுடன் இடப்பக்கம் வந்த ஒப்பற்ற அழகிய மயில் சிறியது. நடனமாடி வந்தபோது அவற்றின் கால்கள் தரையில் பதிய வில்லை. அவற்றின் நிறம் பொன்னிறம் மிகுந்த ஒப்பற்ற பச்சை நிறமாகும். இக்காட்சியைக் கண்டு சுவாமிகள் மனம் மகிழ்ந்து, இரு கரங்கூப்பித் தொழுதார். தன் படுக்கையில் தன் பக்கத்தில் சேய்ப்பரமன் கால் நீட்டித் துயிலும் நுட்பம் அறிந்தவுடன் அக்காட்சியும் மறைந்தது. அப்பொழுது வானிலிருந்து “இன்னும் பதினைந்து நாட்களுக்குள் புண்ஆறிவிடும். அது வரையில் மருத்துவமனை விட்டுச் செல்லல் வேண்டா” எனும் ஒலியும் கேட்டது. சுவாமிகள் முருகனின் கருணையைப் பெற்ற இந்நிகழ்ச்சியானது உலகுக்கு அவன் பெருமையை உணர்த்தியîதாடு சுவாமிகளின் பெருமையையும் உலகறியச் செய்தது சுவாமிகள் மகிழ்ந்து இந்நிகழ்ச்சியை

“முன் காலை உதைத்தவன் கால் முளையாய் நின்றாய்
பின் காலை அடுத்தவரைப் பெரிதும் காத்தாய்
என் காலை இனிது அளித்தாய் இனி எஞ்ஞான்றும்
நின் காலை எனக்குஅளி என்றான் அந்நீத்தோன்”

அசோக சால வாசத்தில் பதிவு செய்துள்ளார்கள். சுவாமிகள் மறையும் வரை சென்னை நம்புலையர் தெரு சகந்நாத முதலியார் இல்லத்தில் இம் மயூர சேவன விழாவைத் தாமே முன்னின்று நடத்தினார்கள். சுவாமிகள் மறைவுக்குப்பின் திருவான்மியூர் சமாதிக் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் இம் மயூர வாகன சேவன விழா சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது. சுவாமிகள் இவ்விழாவை எப்படிக் கொண்டாட வேண்டுமெனத் தாம் இறுதியாக உரைத்த “செவியறிவுறூஉ”ல் குறிப்பிட்டது பின்வருமாறு.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt