குகசாயுச்சிய நிலை பெறுதல்

சுவாமிகள் தனது சீடருள் ஒருவராகிய பு.சின்னசாமி சோதிடரை அழைத்து “திருவான்மியூரில் நிலம் பார். அது விரைவிலாக வேண்டும்” என்று கட்டளை இட்டார்கள்.. அதன் படியே சோதிடரும் நிலம் வாங்கிப் பதிவு செய்து அணியமாக இருந்தார்கள்.

குருவாரம் (30.05.1929) காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் யாருமறியாமலேயே சுவாசத்தை உள்ளுக்கிழுத்தார்கள். அது வெளிவராமல் உந்தியிலேயே எழும்பி அடங்குவதாயிற்று. அந்நிலையே இந்நிலையாக

“நண்ணறிய சிவானந்த ஞானவடிவேயாகி
அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசமர்ந்திருந்தார்”

எனும் வாக்கிற்கேற்பச் சுவாமிகள் செவ்வேட்பரமனின் சேவடி நிழலில் சேர்ந்து, அருள் புரிந்தார்கள். பின்னர் சுவாமிகள் திருமேனி அலங்கரிக்கப்பட்ட புஷ்பவிமானத்தில் ஊர்வலாமக எடுத்து வரப்பட்டு 31-5-1929 வெள்ளிக் கிழமை காலை 8.15 மணிக்கு திருவான்மியூரில் சேர்க்கப்பட்டு சமாதி அமைக்கப்பட்டது. சுவாமிகள் அவ்வாலயத்தில் அமர்ந்து அருளாட்சி புரிகின்றார்கள். தண்ணருளைச் சொரிகின்றார்கள். திருவான்மியூர்க் கோலம் காணும் பேறு பெற்றோர் வாழ்வில் இடர் நீங்கி எல்லா நலம் பெறுவர் என்பது சத்தியம்.
ஸ்ரீமத்-குமருகுருதாச சுவாமிகள் திருவடிகளே சரணம்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt