தில்லையும் விளைந்த தொல்லையும்

தில்லையும் விளைந்த தொல்லையும்

சுவாமிகள் மீண்டும் நிட்டை கூடி நிமலன் அருள்பெற சிதம்பர சேத்திரத்தை அடைந்தார். சிதம்பரத்தை அடுத்த பின்னத்தூரைச் சுவாமிகள் தேர்ந்தெடுத்தார்கள். மணிவாசகப்பெருமாள் சிவனருளால் ஊமைப் பெண்ணைப் பேச வைத்த தலம் என்பதால் ஆயின் செவ்வேட் பரமன் விந்தையை யாரறிவார்? செத்துப் பிறந்த இராமனையும் கண்ணணையும் வழிபடும் மால் (மயக்கம்) அடியார்களின் மமதை (ஆணவம்) பின்னப்பட சுவாமிகள் சைவசமய சரபமாய் வெற்றிவாகை சூட விதி சுவாமிகளை அங்கே அழைத்ததுபோலும்? அவ்வூர்ச் சிவநேயர் வ.இரத்தினசாமிப் பிள்ளை மூலம் அங்குள்ள வைணவர் குறும்பை அவர்கள் வெளியிட்டுள்ள சிவ தூடனை அறிக்கைகளையெல்லாம் சுவாமிகள் கண்டு கொதித்தெழுந்தார். சுவாமிகள் ஆலோசனைப் படி இவ்விரு சமயத்தாரும் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளலாமென உடன்படிக்கை பிரகடணத்தை இரத்தினசாமிப் பிள்ளை வெளியிட்டார். “________ ரூபாய் முத்திரைக் காகிதம்________ம்______ம் செய்து கொண்ட உடன்படிக்கை “சைவர்கள் தங்கள் அவயங்களின் பஸ்மங் கொண்டு தரித்து வருகிற == இவ்விதப்புண்டரம் வேதத்தில் உண்டென்பதை அந்த வேத வாயிலாகச் சைவருள் ஒருவனாகிய நான் ஒப்புவிக்கத் தவறினால் அவ்விதப் புண்டரத்தை நானும் இவ்வாதத்திற்கு ஏற்படும் சபையில் வாதிக்க நிற்பவர்களும் மறுபடியும் அணியாமல் இழந்து விடக் கடவோமாக. வைணவர் வணங்குத் தெய்வத்திற்குப் பதினான்கு வித்தையிற் சேர்ந்த வேதம் முதலிய நூல்களில் பஸ்மதாரணம் உண்டென்று காட்டும் படிச் செய்வேனாக, சிவம், பிரம்ம விஷ்ணு ருத்ரர்களின் மேம்பட்ட “சதுர்த்தம்” அதாவது நான்காவது தெய்வமென்று வேதத்திற் பல வாக்கியங்கள் எடுத்துக் காட்டி அந்தச் சிவத்திற்கும் பரஸ்துவம் ஸ்தாபிக்கும்படி செய்வோனாக.

வைணவர்கள் தங்கள் அவயங்களில் வெள்ளை மண்ணும் மஞ்சட் பொடியுங் கொண்டு தரித்து வருகிற U இவ்விதப் புண்டரம் வேதத்தில் உண்டு என்பதை அந்த வேதவாயிலாக வைணவருள் ஒருவனாகிய நான் ஒப்புவிக்கத் தவறினால் அவ்விதப் புண்டரத்தை நானும் இவ்வாதத்திற் கேற்படும் சபையில் வாதிக்க நிற்பவர்களும் மறுபடியும் அணியாமல் இழந்துவிடக் கடவோமாக. சைவர்கள் வணங்கும் சிவனுக்கு மேற்படி வேதம் முதலிய வித்தைகளில் இங்கு காட்டிய ஊர்த்துவ புண்டர தாரணம் உண்டென்று காட்டும்படிச் செய்வேனாக. விஷ்ணு, பிரம்ம விஷ்ணு, ருத்ரர்களின் மேம்பட்ட “சதுர்த்தம்” அதாவது நான்காவது தெய்வமென்று வேதத்திற்கு பல வாக்கியங்களெடுத்துக் காட்டி விஷ்ணுவுக்கும் பரத்துவம் ஸ்தாபிக்கும்படி செய்வேனாக.இவ்வித ஏற்பாட்டில் யார் தவறினாலும் நிபந்தனை. இவ்விஷய வாதத்திற்குச் சிதம்பர ஷேத்திரத்திலாவது சென்னையிலாவது நிகழும் குரோதிளூதைமீ..உ கூட்டப்படும் சபைக்கு இருதிறத்துக்கு முரிய வடமொழி தென்மொழி வித்துவான்களை ஆஜர் செய்து கொள்ள எவ்வித காரணத்தால் யார் தவறினாலும் அவர் ஆஜரான வித்வான்களில் அக்கிராசனாதிபதியாயிருக்கு மொருவர் தீர்மானப்படி நடக்க வேண்டும். நடவாவிடின்,அங்ஙனமே நம்மில் அநுகூலதீர்மானம் பெற்றவர்க்குத் அவ்விதத் தீர்மானம் பெறாதவர் நூறுரூபாய் உடனே செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும்.

30.12.1904 சைவருள் ஒருவனாகிய………………வைணவருள் ஒருவனாகிய………………

பின்னத்தூர் விசுவாவசு À புரட்டாசி மீ11உ பி.வ.இரத்தினசாமிப் பிள்ளை.

இதனைப் படித்துப் பார்த்த வைணவர் வாதிட அஞ்சி எங்களுக்கு விருப்பமில்லையென்று வாளாயிருந்து விட்டனர். பின்னர் வைணவர்கள் மீண்டும் சைவர் ஒருவர் வெளியிட்ட “சிவ பரத்துவப் பிரபல சாஸ்திர பிரகடனம்” என்ற பத்திரிகைக்கு மறுப்பு தெரிவிக்கும் முகத்தான் சிவ தூடனையும் ஆபாசம் நிறைந்ததுமான மறுப்புநூல் ஒன்றை அச்சுக்கூடப் பெயரின்றி வாயீர்வான் என வெளியிட்டனர்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt