பாம்பன் ஸ்வாமிகள் அருளிய ஞானவாக்கியம்!

12. ஔடத சித்தி விவச நெறிக்கில்
பேரின்பமாகிய வீட்டு நெறியை விழைந்து நடை தருவோர் மருத்துவஞ் செய்யுந் திறனை விரும்பல் கூடாது.
(மருத்துவம் செய்தல், தருமம் செய்ய வேண்டும் என்னும் பிடிப்பு துறவிக்கு ஆகா என்பதை ‘சிகித்ஸாதர்மஸாஹஸம்’ என்று நாரத பரிவார கோபநிடத்து 4ஆம் உபதேசம் கூறுதல் எண்ணுக)
13. அஃக லிலாதார் தர்க்க மிடாரே
தாம் மேற்கொண்ட ஞானநெறி மெலிந்து நசியாது மேன்மேல் ஓங்கும் வண்ணம் ஓழுகு வோர் நூல்களின் உரைகளைப் பற்றிக் கொண்டு தருக்கம் புரிந்து காலத்தை வீணாகக் கழியார்.
(வாக்கு விவாகரத்துக்கு எட்டாததும், கைக்கெட்டாததும், அனுமான அளவையால் அளக்கப்படாததும், சிந்திப்பு எட்டாததும், இத்திறத்தென நிச்சயிக்க ஒண்ணாதலும், ஏகான்மானந்தமாயிருப்பதும், பிரபஞ்சலயத் தானமாயுள்ளதும், சாந்தமாயிருப்பதுமாகிய சிவம்” என்று மாண்டூக்யோபநிடதமும், அதிவாத தருக்கங்களை விடல் வேண்டும். ஒரு கட்சியி லும் சேர்தல் கூடாது‘ என்று நாரத பரிவாரச கோபநிடத (5ம் உபதேச)மும் எதுக்களாலு மெடுத்த மொழியாலு மிக்குச் சோதிக்கவேண்டா சுடர்விட்டுளனெங்கள் சோதி” என ஞான சம்பந்தப்பெருமானது தமிழ் மறையுங் கூறல் காண்க)
14. சுருளும் பகலு மருணிலை யில்லை.
இருள் நிலையாகிய உறக்கமும் பகல் நிலையாகிய விழிப்பும் அருள் நிலை எய்திய ஞானிக்கு இல்லை.
(எவனுக்கு விழிப்பு இல்லையோ, சுழுத்தியுறக்கத்துள்ளவன்அவ்வுறக்கத்தின் நீங்கி (விழியா) விழிப்பில் இருக்கின்றானோ, எவனது போதம் வாசனையற்றதாக இருக்கின்றதோ அன்னோன் சீவன் முத்தன் என்று சொல்லப் படுகின்றனன்” என்று வராகோபநிடத்து 4 ஆம் அத்தியாயமும் “எனை நானென்ப தறியேன் பகலிரவாவது மறியேன் மனவாசகங் கடந்தானெனை மத்தோன்மத்தனாக்கி” என்று மணிவாசகப்பெருமானது தமிழ்மறையும் சாற்றுதல் அறிக.)
15. ஙகரம் போல்வர் புகரில் குரவர்.
குற்றம் யாவும் கழிந்தொளிரும் குருவாவர் ஙகரம் போன்றிருப்பார். (முழு மதியன்ன கறையற்ற கல்வியும் அது காரணமாக நிகழும் தவவலிவும் அதன் முதிர்ச்சியால் உண்டாகும் அருட்பிரகாசமும் உடையர் ஆகலின் புகரில் குரு எனப்பட்டார். ஙகரம்தான் பெற்ற வாழ்வால் தன் கிளைகளாகிய ஏனைய (ஙகர) எழுத்துக்களுக்கும் இருப்பு வழங்குவதாயது. அதுபோலக் குரவரும் தம் கிளைகளாகிய மாணாக்கர்களும் தம் அருளொளி எய்திப் பேரின்ப வாழ்வில் சேர வைப்பார். பாம்பன் சுவாமிகள் போன்று எனைத் தள்ளினாலும் மென்னை நம்பினவர்த் தள்ளேல்’ என்று சீடர்கட்காகப் பரந்து மன்றாடுபவரைக் கண்டிலம். ஆகலின் அடிகளார் நிலை மேற்கூறிய புகரில் குரவர் நிலையினும் மாண்புடையது என்பது சொல்லவும் வேண்டுமோ?
சடநிழல் போல்வ ரிடர்பு சீடர்
தம் ஞானாசிரியரின் இடர்களையும் சீடரென்பார் அக்குருவை விட்டு நீங்காத அவருடம்பின் நிழல் போன்றோராவர்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt