மகாதேஜோ மண்டலம் நிறுவினார்

மகாதேஜோ மண்டலம் நிறுவினார்

சுவாமிகள் சேய்ப்பரமன் (பாலமுருகன்) ஒருவனையே வணங்கும் ஏக தெய்வ வழிபாட்டுக் கொள்கை உடையவர்கள். பல தெய்வ வணக்கத்தைக் கடுமையாகச் சாடிப் பாடியுள்ளார்கள்.

“நோய்வந்த காலத்திற் பேய்களைக் கும்பிட்டு
நோன்மையை மறந்த துஷ்டன்” என்றெல்லாம்

மேலும் திருப்பாவில் சுவாமிகள்

“இதயாம்பரத்தில் தியானம் ஒரு மூர்த்தி பாவனையிலேயே கூடுமதனாற் பல மூர்த்தி வழிபாடு பந்தமாம்” என்று பகர்ந்துள்ளமை காண்க. அளவிலாத் தேஜோ மண்டல இறைவன் ஒருவனையே ஆசாரத்தோடும் அன்போடும் வழிபடூ உம் அடியார் அனைவரும் எத்தேசத்தாராய் எக்குலத்தாராய் இருப்பினும் அவர் மகாதேஜோ மண்டலத்தார் ஆவாராகலின் யாமவரை இப்பெயர் தரித்து நிற்கும் கடன்மைக்கு உட்படுத்தியுள்ளோம் (திருப்பா – கடவுள் வணக்கம். முன் உரை). மேலும் சுவாமிகள் எழுதிய வில் சாசனத்திலும் தனக்குப்பின் “மயூரவாகன சேவன விழா” க்களை நடத்தவும் தம் நூல்களை வெளியிடவும் அம் மகாதேஜோ மண்டலத்தார்க்கே உரிமை அளித்துள்ளார்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt