கல்லால சித்தர்

ஆம்! அது உண்மைதான் மண்டிக்கிடந்த புதர் நடுவில் சிவலிங்கத் திரு மேனி ஓன்று கவனிப்பா ரற்று கிடந்தது. அன்பர்கள் பலர் சேர்ந்து சுற்றிலும் தூய்மைப்படுத்தினர். அழகிய ஆலயம் ஒன்று எழுப்பினர்.

லிங்கத்திருமேனியை திருக்கோயிலில் எழுந்தருளச் செய்யவேண்டும் என எண்ணினர்.

சிவலிங்கத் திருமேனி கல்லால மரத்தின் கீழ், சிறப்புடன் வீற்றிருந்து, மரத்தின் தோற்றம் பார்த்தால் தொன்மை வாய்ந்ததாக இருந்தது. குறைந்த பட்சம் 400/500 வருடங்கள் வயதுடைய மரம் போல் காட்சியளித்தது.

இப்போது லிங்கத்திருமேனியை பெயர்த்து புதிதாக கட்டப்பட்டுள்ள திருக்கோயிலில் நிறுவிட முயன்றபோது அது முடியவில்லை.

லிங்கத்தை பெயர்க்க முடியவில்லை. அன்பர்கள் வாட்டமுற்றனர்.
இந்த நிலையில் ஸ்தபதி, நரசிம்ம சில்பாச் சாரியார் அவர்கள் தமது காதுக்கு எட்டிய செய்தியால் ஸ்தலத்துக்கு திசைக்கு வந்து பார்த்தார்.

ஆம்! உடனடியாக நெய்வேலிக்கு வந்த ஸ்தபதி நரசிம்மாச்சாரி அந்த லிங்கத்திரு மேனியில் ஆழ்ந்து போனார். அந்த இடத்தைப் பற்றி முழுமையாக தமது பாரம்பரிய ஸ்தபதி தன்மையை உபயோகித்து திருவருளின் திறத்தை எண்ணி ஆழ்ந்த யோசனையில் இருந்தபோது லிங்கத்திருமேனி இருக்கும் இடம் ஒரு மகானின் ஜீவசமாதி என்பதை உணர்ந்தார். ஜீவவிருட்சமாய் கல்லால மரம் உள்ளது என்பதையும் கண்டறிந்தார்.

நாட்கள் சில சென்றன. நெய்வேலி மகானையே நினைந்திருந்த ஸ்தபதி நரசிம்மாச்சாரியார் ஜீவசமாதியில் மோனத்தவம் இருப்பவர் கல்லால சித்தர் என்பதை உணர்ந்தார். கல்லாலசித்தரின் சீடர்கள் எண்மர் என்பதை அறிந்தார். தமது நண்பர்கள் பலரையும் சேர்த்து அவ்விடத்தில் ஒரு மண்டலம், சிவலிங்கத்திருமேனியை ஆன சக்காது, நிறுவ கல்லாலச்சித்தரிடம் அனுமதி பெற்றார்.

பாலு ஜீவல்லர்ஸ், பாலு ஐயப்பன், கதிர்காமன் ஜீவல்லர்ஸ், ஆர்.சேது, ஆர்.திலக் போன்றோர் மூலம் கல்மண்டபத்திருப்பணி தொடங்கியுள்ளார்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt