சண்முகக் கவசம்

– பாம்பனார் பைந்தமிழரசு ஸ்ரீலஸ்ரீ கருமாரிதாசர்

பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முகக் கவசம் என்ற அற்புதமான அருள் நூல் – திருநூல் – கிரந்தம் – அதிசயமானது, ஆபூர்வ சக்தி படைத்தது, எத்தனையோ கவசங்கள் இருந்தாலும் சண்முக கவசம் என்ற மகாமந்திர நூலை என்னுடைய கண்ணோட் டத்தில் கூறுவதென்றால் கவசச்சக்கரவர்த்தி சண்முக கவசம் என்றே கூற வேண்டும்.

உடற்பிணி, உள்ளப்பிணி இவைகளை போக்குவதில் தனக்கு நிகர் தானே என்ற நிலையில் உள்ளது. பாரத தேசம் செய்த தவப்பயனால் சுவாமிகளின் தவமுதிர்ச்சி பெற்ற ஞானத்தால் – சிவம் பெருக்கும் கலையால் தோன்றி யதே சண்முகக் கவசம். வேதங்களும் ஆகமங்களும் உபநிடதங்களும் இதிகாசங் களும் தத்துவங்களும் உணர்ந் தோர்கள் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தி வழிபடும் நூல் சண்முகக்கவசம் ஆகும்.

நல்ல காலம் நல்ஊழ் வந்த நேரத்தில் சண்முகக் கவசம் பாராயணம் தோன்றுவதற்குரிய சிந்தனை ஏற்படும். தவச்சீலராகிய பாம்பன் சுவாமிகள் முருகன் கவசம் என்றுரைக்காமல்; கந்தன்கவசம் என்றுரைக்காமல்; சண்முகக் கவசம் என்ற அற்புத திருநாமம் வழங்கியதற்கு என்ன காரணம்? சுவாமிகள் அருளிச் செய்த “குமாரஸ்தவம்” என்ற மந்திரங்களில் முதலாவதாக
“ஓம் சண்முக பதயே நமோ நமே; ஓம் சண்மத பதயே நமோ நமே”
என்ற இரண்டு மந்திரங்களின் அரும் பெரும் கருத்தை உள்ளடக்கியது சண்முகக்கவசம் ஆகும். “ஓம் ஷட்கோண பதயே” என்ற கருத்தையும் தோற்றுவிப்பதாகும். மகிமை மிகுந்த இந்நூல் உள்ளுணர்ந்து ஓதுகின்ற உத்தமர்க்கே எளிதில் புலனாகும். ஆறு ஆதாரங்களில் ஆறு படை வீடுகளின் திருவிளையாடளையும் காணு கின்ற வல்லமையைக் கூட்டும் “ஆறெழுத்து திருமந்திரம்” எவ்வளவு உயர்ந்தது; உன்னதமானது உயர்வு தன்மை உடையது; உள்ளத்தி லும் உணர்விலும் ஓங்கி வளர்வது; என்றெல்லாம் தபோதனர்கள் சிந்திக்கின்றார்கள்.

திருவாறெழுத்து திருமந்திரம் நினைத்தால் மனத்தூய்மை தரும்; சொன்னால் வாக்கு வளம் கூடும்; கேட்டால் செவி இனிக்கும்; படித்தால் பற்பல பயன்கள் கூடும்.

மந்திரங்களில் தலைசிறந்தது திருவாறெழுத்து மந்திரம் இதனை வலியுறித்தி சுவாமிகள் அகச் சான்று, புறச்சான்று, அனுபவித்து, நிரூபித்து, அருள் தன்மையால் விளக்கி, குமார பரமேஸ் வரனின் திருநாம மகிமையை குறிப்பிட்டுள்ளது. ‘அகரம் முதல் னகரம்’ வரை முப்பது எழுத்துக்கள் 30 பாடல்களால் அருளிச்செய்த இக்கவசம் மகாமந்திர சக்தியுடையது என்பதற்கு ஓர் சான்று ‘ஓம் ஐம் ரீம்வேல் காக்க’ என்று குறிப்பிட்டுள்ளது. வேலின் திறத்தை நன்கு விளக்கி உயிர்களை காக்க வேண்டுமென்று பிராத்தனை செய்த குருநாதரின் உள்ளக்கிடக்கை எவ்வாறு வர்ணிப்பது.

முழு முதல் பரம்பொருள் முருகனே என்று தெளிந்து உணர்ந்து அப்பரம்பொருள் மீது ‘ஆறாயிரத்து அறநூற்று அறுபத்தாறு” பாடல்களை அருளிச்செய்து ஆறு மண்டலங்களாக வகுத்து சிவனருள் கலைகளஞ்சியம் என்று போற்றத்தக்க வகையில் முருகனைப் புகழ்வது; அப்படிப்பட்ட தவச்சீலர் சண்முகக் கவசத்தை தொடங்குகின்ற பொழுது ‘அண்டமாய் அவனியாகி’ என்று தொடங்குகின்ற பாங்கு ‘அண்டம்’ என்பது விண், வெளி, தகனம், விசும்பு, கம் என்று பலபொருள்படும்.

“ஆகாயம்” என்றும் குறிப்பிடலாம். ஆகாசம், ஸரிரம், பிரம்மம் என்பதால் அறியலாம்.

‘அண்டமாய்’ என்று தொடங்குவது – அண்டத்தின் தேவலோகத்து தெய்வயானைப் பிராட்டியை முன்னே வைத்து பாடியதாகும்.

அருணகிரியார், “முத்தைத் தருபத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண” என்று தெய்வயானைப் பிராட்டியை முதலில் வைத்து பாடியதைப் பின்பற்றி “அண்டமாய்” என்றார்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt