தலயாத்திரை குமரகோட்டம் காணல்

தலயாத்திரை குமரகோட்டம் காணல்

“கால் களாற் பயினென்” என்ற அப்பர் திருவாக்கிற்கேற்பவும். “பெரிய கர்த்தர் வாசஸ்தலத்தைக் கருதி வழி நடவாத காலலின்னகால்” என்று பாடியுள்ளமையாலும் சுவாமிகள் எப்பொழுதும் தலயாத்திரையை மேற்கொண்டார்கள். திருவாலவாய், காளத்தி, திருத்தணிகை, திருவண்ணாமலை என்றும் தலங்களைத் தரிசித்துக் கொண்டு கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர் நண்ணினார்கள். பத்துத்திங்களுக்கு மேல் தங்கி தலவழிபாடு புரிந்தமையால் கையிருப்பு கரைய ஊர் செல்ல எண்ணி சத்திரத்தை கடந்தார்கள். தலையில் வெள்ளை முண்டாசு வெள்ளாடை அங்கி அணிந்த அழகிய இளைஞன் சுவாமிகள் முன் தோன்றி “நீர் எவ்வூர்?” என்று வினவ சுவாமிகள் “தென் தேசம்” என அவர் “வந்த காரியாம் யாது?” என இவர் “தெய்வ தரிசனம்” என அவர் “குமர கோட்டம் கண்ணுற்றாயோ?” என இவர் விழிக்க அவர் “நான் வழி காட்டுகிறேன். என் பின்னே வருக” என இவர் அவரை பின் தொடர அவர் கோயிலைக் காட்டி “இதோ கொடி மரம்” என்று கூறி திருவுருக் கரந்தார். சுவாமிகள் முருகனின் கருணையை எண்ணி எண்ணித் தொழுது அழுது வழிபட்டார்கள். இந்நிகழ்ச்சி ஸ்ரீமத் குமார சுவாமியத்து வருகை விழைந்திரங்கலில்,

“பிமர மீட்டஞ் செய் காஞ்சியினான் சிலநாள்
பெரிய கோயில்கள் கண்டுபு றப்படுஞான்று
அமல மூர்த்தங்கொள் ஆசுடை வீக்கிய செவ்
வழக னாய் என்முன்வந்து” நும்காரியமென்?
குமர கோட்டம் கண்ணுற்றதின் றிங்கெனவே
குயின்று காட்டி மறைந்த தயாநிதியே!
தமசில் வேற்செங்கையா நினையேகருதித்
தடவுகின்ற தென் நெஞ்சை வலக்கரமே”

என ஆசிரியர் பாடியருளியிருத்தல் காண்க.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt