நோய் நீக்கி ஆரோக்கியம் தரும் அகத்தீஸ்வரர்


அகத்திய முனிவர் இச்சிவலிங்கத்தின் இடது பாகத்தில் அம்பாள் மனோன்மணி சக்தியை ஒரு அரூபமான தோற்றத்தில் வைத்து சிவசக்தி ரூபமாக பூஜித்துள்ளார்.

அகத்தீஸ்வரர் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறார். அம்பாள் ஆனந்தவல்லித் தாயார் முக்கண் நாயகி. உருவத்திலேயே மூன்று கண்களை கொண்ட அம்பாள். ஆனந்தவல்லி தெற்கு நோக்கித் தரிசனம் தருகிறார்.

ஆனந்தவல்லி அம்பாளின் திருமேனி பச்சை மரகதத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இடது பாதம் முன் வைத்த தோற்றமாகக் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.

பொதுவாக வலது காலை முன்வைத்து வா என்று அழைப்பதே வழக்கம். ஆனால், ஆனந்த வல்லி அம்பாள், அகத்திய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது யாகங் களுக்கு இடையூறு செய்ய வந்த அசுர சக்தி களை அழிக்க தன் இடது பாதத்தை முன் வைத்து மூன்று கண்களைக் கொண்டு அசுர சக்திகளையும், தீய சக்திகளையும் அழித்ததால் இங்கு சத்ரு சம்ஹார கோலத்தில் காட்சி தருகிறார்.

தீயசக்திகளை அழிக்கும் பொருட்டு அம்பாள் தன்னுடைய இடது பாதத்தை முன் வைத்துச் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எனவே, இத்தலத்து அன்னை சத்ருசம்ஹாரி யாகத் திகழ்கிறாள். இச்சத்ரு சம்ஹாரியை வழிபாடு செய்தால் தீய சக்திகளின் தொல்லைகள் இருக்காது. செயல்களில் தடங்கல்கள் இருக்காது.

சத்ரு சம்ஹாரியாக உக்கிரமாகத் திகழ்ந்த அன்னையைக் குளிர்விக்க அன்னைக்கு முன் மிகப் பெரிய மஹா எந்திரத்தை (துர்கா எந்திரம்) அகத்திய முனிவரே பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்தப்படுத்தியுள்ளார். இந்த யந்திரத்தை வழிபட்டால் சகலவிதமான தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

இஷ்ட லிங்கேஸ்வரர் மகிமை

இந்த ஆலயத்தின் வடக்கு மூலையில் அகத்திய முனிவரின் சீடரான புலத்திய முனிவர் இஷ்ட லிங்கம் என்ற சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார்.

இந்த இஷ்ட லிங்கத்தை நாம் வழிபாடு செய்தால் நம்முடைய விருப்பங்கள் நிறைவேறு வதுடன், அமைதியான வாழ்வு, மனச்சாந்தி கிட்டும் என்பது இங்கு வரும் பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாகும்.

பிற தெய்வங்கள்

இறைவன் இறைவியைத் தவிர, பஞ்சேஷ்டி, தெய்வங்களாக விநாயகர், தக்ஷிணாமூர்த்தி, மஹாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை, பைரவர் ஆகியோரின் சன்னதிகளும் அமைந்துள்ளன. சித்தி விநாயகர் சன்னதி, பாலமுருகன் சன்னதி (முருகனின் சிருஷ்டி கோலம்-அக்ஷமாலை, கண்டிகையுடன் பிரம்மாவின் சிருஷ்டி தொழிலை பிரம்மனிடமிருந்து பறித்து தானே மேற்கொள்ளும் தோற்றம்), சண்டிகேஸ்வரர் சன்னதி, இஷ்ட லிங்கேஸ்வரர் சன்னதி, நவக்கிரக சன்னதி மற்றும் அகத்திய முனிவரின் சன்னதி ஆகியவை பிரதான ஆலயத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

ஆலயத்தின் வடமேற்குப் பகுதியில் பெரிய புற்று அமைந்துள்ளது. அப்புற்றினுள் இன்றள வும் நாகம் ஒன்று வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பைரவர்

இஷ்ட லிங்கேஸ்வரருக்கு கிழக்கில், ஈசான்ய திசையில் பைரவருக்குத் தனிச்சன்னதி அமைந்துள்ளது.

அகத்திய தீர்த்த மகிமை

கோவிலின் கிழக்குப் பகுதியில் அகத்திய தீர்த்தம் பரந்து விரிந்து காணப்படுகிறது. அகத்திய முனிவர் கூறியபடி சுகேதுவும் அவனது குடும்பத்தினரும் இத்தீர்த்தத்தில் மூழ்கி, சிவனை வழிபட்டு, யாகம் வளர்த்து சாப விமோசனம் பெற்றனர். இன்றும் இத்தீர்த்தத்தில் மூழ்கி, கோவிலை வலம் வந்து, அங்கப்பிரதட்சணம், அடிபிரதட்சணம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால் தீராத நோய்களும் தீர்வதாக ஐதீகம்.

இராஜகோபுரம்

இந்த ஆலயத்தில் அம்பாள்தான் பிரதானம். இராஜகோபுரமே அம்பாளுக்காக அமைக்கப் பட்டுள்ளது. இராஜகோபுர நுழைவாயில் சிற்பத்தில் அம்பாளே நோக்கியவாறு நவக்கிர கங்கள் ஒரே நேராக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இதில் சனீஸ்வர பகவான் கழுகு வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு அம்பாளின் பார்வையில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளதால் அம்பாள் ஆனந்தவல்லியை வழிபாடு செய்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
அஷ்டதிக் பாலகர்கள் (திசை தெய்வங்கள்) ஒரே நேராக அம்பாளை நோக்கி அமைந் துள்ளது. அம்பாளுக்கு முனனேயுள்ள மஹா எந்திரத்தின் அதிதேவதைகளின் சிற்பங்களின் வடிவம் இராஜகோபுர நுழைவாயில் மேல் முகப்பில் அமைந்துள்ளது.

தோஷ நிவர்த்தி மகிமைகள்

ஒரு ஆலயத்தின் இராஜ கோபுரம் தெற்கில் அமைந்து இருந்தால் அது பரிகாரத் தல மாகவே கருதப்படுகிறது. இக்கோயிலிலும் இராஜ கோபுரம் அம்பாளுக்காக தெற்கில் அமைந்துள்ளது. எனவே பஞ்சேஷ்டி ஆலய மும் பரிகாரத் தலம் என்பது அனைவருக்கும் விளங்கும்.
இத்திருக்கோயிலில் பக்தர்கள் எவ்வித பரிகாரம் செய்தாலும் அவற்றின் தொடக்கமாக கருவறைக் கூடத்தில் அகண்ட தீபம் மற்றும் விளக்குகள் ஏற்றி வைத்த பின்பே மற்ற பரிகாரங்களைச் செய்தல் வேண்டும்.

இழந்த சொத்து மீண்டும் கிடைக்க:

அகத்திய முனிவரால் செய்யப்பட்ட ஐந்து யாகத்தில் அன்னதானத்தையே ஒரு யாகமாகச் செய்துள்ளார். அதனால் இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்தால் இழந்த பதவிகள் நமக்குக் கிடைப்பதாகவும், உயர் பதவிகள் தேடி வரக்கூடும் என்றும், பிறவிப் பயனை அடைவதற்கு வாய்ப்பாக அமையும் என்று அகத்திய முனிவரே ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துச் சென்றுள்ளார். அந்த உண்மைத் தன்மையை அகத்தியர் ஆசிரமங்கள் மூலமாகக் கேட்டறிந்து இன்றளவும் பலர் இத்திருத்தலத்தில் அன்னதானம் செய்கின்ற னர். இது ஒரு அன்னதான ஸ்தலமாக அமைந்துள்ளது.

திருமணத்தடை நீங்க:

அம்பாளுக்கு முன் மிகப் பெரிய மஹா எந்திரத்தை (துர்கா எந்திரம்) அகத்திய முனிவரே பிரதிஷ்டை செய்து அம்பாளை சாந்தப் படுத்தியுள்ளார். இந்த மஹா எந்திரத்தில் ராகு கால நேரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகங்கள் செய்து, எலுமிச்சம்பழ விளக்குகளை இந்த எந்திரத்தைச் சுற்றிலும் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால் திரு மணத் தடைகள் விலகுவ தாகவும், சத்ருக்களின் தொல்லைகள் நீங்குவதாக வும் ஐதீகம்.

நவக்கிரக தோஷம் நீங்க:

இந்த ஆலயத்தில் அம்பாள்தான் பிரதானம். இராஜகோபுரமே அம் பாளுக்காக அமைக்கப் பட்டுள்ளது. இராஜகோபுர நுழைவாயில் சிற்பத்தில் அம்பாளை நோக்கியவாறு நவக்கிரகங்கள் ஒரே நேராக அமைக்கப்பட்டு¢ள்ளன. மேலும் இதில் சனீஸ்வர பகவான் கழுகு வாகனத்துடன் காட்சியளிக்கிறார். இவ்வாறு அம்பாளின் பார்வையில் நவக்கிரகங்கள் அமைந்துள்ளதால் அம்பாள் ஆனந்தவல்லியை வழிபாடு செய்தால் நவக்கிரகத் தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

வாஸ்து தோஷம் நீங்க:

அஷ்டதிக் பாலகர்கள் (திசை தெய்வங்கள்) ஒரே நேராக அம்பாளை நோக்கி அமைந்துள் ளது. அம்பாளுக்கு முன்னேயுள்ள மஹா எந்திரத்தின் அதிதேவதைகளின் சிற்பங்களின் வடிவம் இராஜகோபுர நுழைவாயில் மேல் முகப்பில் அமைந்துள்ளது. தெற்கு திசையை நோக்கி ஒரு ஆலயத்தினு டைய இராஜகோபுரம் அமைந்திருந்தால் அந்த ஆலயம் ஒரு பரிகாரத் தலம் என்று கருதப்படு கிறது. எனவே அம்மனை யும் மஹா யந்திரத்தையும் வழிபட்டவர்களின் வாஸ்து தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

சத்ரு தோஷம் நீங்க:

இராஜகோபுரம் அம் பாளுக்காக அமைந்து இருப்பதாலும் அம்பாள் சத்ரு சம்ஹாரியாக இருப்ப தாலும் இந்த ஆலயமே சத்ரு தோஷ பரிகாரத் தலமாக அமைந்துள்ளது.

விரும்பியன கிடைக்க:

இந்த ஆலயத்தின் வடக்கு மூலையில் அகத்திய முனிவரின் சீடரான புலத்திய முனிவர் இஷ்ட லிங்கம் என்ற சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து பூஜித்துள்ளார். இஷ்ட லிங்கத்தை நாம் வழிபாடு செய்தால் நம்முடைய விருப்பங்கள் நிறைவேறுவதாக வும், மனச்சாந்தி கிடைப்பதாகவும், வழக்கு விவகாரங்கள் தீர்வதாகவும் ஐதீகம்.

பரிகாரத் தலம் பஞ்சேஷ்டி

ஒரு ஆலயத்தின் இராஜகோபுரம் தெற்குத் திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்தால், அத்திருத்தலம் பரிகாரத்தலமாகக் கருதப்படும் என்பது ஐதீகம்.

பஞ்சேஷ்டி திருக்கோயிலின் இராஜ கோபுரம் தெற்கு திசைநோக்கி அமைக்கப் பட்டுள்ளது. மேலும் சத்ரு சம்ஹாரியாக விளங்கும் அன்னை ஆனந்தவல்லிக்காக அமைக்கப்பட்டுள்ளது. எனவே பஞ்சேஷ்டி திருத்தலம் பரிகாரத்தலமே ஆகும்.

சத்ரு தோஷம், திருமணதோஷம், முன் னேற்றத் தடை தோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களை நீக்குவதுடன், மீண்டும் பிறவாத பேறினையும் அளிக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. திவ்யத் திருத்தலமாம் பஞ்சேஷ்டி திருத்தலம் அகத்தியர் நாடி ஜோதிடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் திருக் குளத்தில் நீராடி கோயிலை வலம் வந்து தீபங்கள் ஏற்றி பரிகாரசங்கல்பங்கள் செய்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

பிறவிப் பெரும் பயனுக்கும்

மீண்டும் பிறவாமைக்கும் பரிகாரம்.
இத்திருத்தலத்தில் வறியவர்களுக்கு (ஏழைகளுக்கு) ஒரு பிடி அன்னம் அளித்தால் நாம் பிறவியினுடைய பெரும் பயனை அடையலாம். அகத்திய முனிவரின் யாகத்தின் பயனால் நாம் செய்யும் பரிகாரங்களால் பலன்கள் பல மடங்காகப் பெருகுகின்றது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்கு வைகாசி மாதத்தில் கரும் திலமும், பசும் சாணமும் தலையில் தரித்துக் கொண்டு திருக்கோயில் திருக்குளத்தில் மூழ்கி எழுந்தால் மீண்டும் பிறவாமையை அடையலாம் என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

தீபங்கள் ஏற்றினால் பாவங்கள் விலகும். பாவங்கள் தீர்க்க கடும் பஞ்சேஷ்டி அங்கப் பிரதக்ஷிணங்கள், அடி பிரதக்ஷிணங்கள் யாவும் இத்தலத்தின் பரிகாரமாகும்.

குரு அகத்திய முனிவர் குறித்து சீடர் புலஸ்திய முனிவர் பாடிய பாடல்
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழலாவானை
நீங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயர்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலிபோல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமுமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணை வருங்காலம் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்

கோயிலைத் தரிசிக்க

பஸ்ரூட்-கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செங்குன்றம் காரனோடை வழியாக 112, 112ஏ, 112பி, 131ஏ, 131பி, 133 எம், 90, 58சி,  பஸ் நிறுத்தும் இடம்-பஞ்சேஷ்டி.

தொடர்புக்கு:
என்.கணேஷ் குருக்கள் – 98413 44867,
மற்றும் அர்ச்சகர்கள்

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt