பிறப்பையறுக்கும் பிரப்பன் வலசையில்

பிறப்பையறுக்கும் பிரப்பன் வலசையில்

“தேடார்ச்சில்வை வாடாத் தெய்வம்” என அருளிய குருநாதர் அதற்குரிய இடமாக வெள்ளலைகள் வீசு கடல் ஓரம் அமைதியான மணற் சூழ்ந்த நெய்தல் நிலச் சிற்றூரான “பிரப்பன் வலசையைத் தேர்ந்தெடுத்தார்” – சுவாமிகள் ஆணைப்படி மயான வெளியில் ஒரு கொட்டகை நிருமிக்கப்பட்டு அதன் நடுவே மனிதர் இருக்கத்தக்க சதுரக் குழியொன்று வெட்டப்பட்டு முள்வேலி நாற்புரமும் நாட்டப்பட்டு மேற்புறத்தில் கதவும் இடப்பட்டன. சுவாமிகள் அக்குழியில் அமர்ந்து முப்பத்தைந்து நாள் தவம் புரிந்தார்கள் ஒருவேளை உணவுமட்டும் உட்கொண்டு. ஒருபகலில் பாம்பு உள் நுழைந்தது. சுவாமிகள் அஞ்சவில்லை. ஐந்திரவுகள் ஆணும் பெண்ணுமான பேய்கள் இவரை சூழ்ந்து கொண்டன. ஒரு முனியொன்று இவரை தூக்கிட இவர் யோகதண்டத்தால் அதை அடித்தும் பயன் படாமையால் திருவாறெழுத்தை உச்சரித்தார். அதன்பின் அஃதகன்றது. இவ்வாறு 6 நாள்கள் அகன்ற பின் 7ஆம் நள்ளிரவில் ஜடாமகுடமணிந்த இரு துறவிகள் நடுவே முருகன் இளைஞனாக சுவாமிகள் முன்னே தோன்றி நின்று கொண்டிருக்கும்பொழுது அவ்விருவரும் “கல்வியறிவில் மேம்பட்ட இவர் உமைக் காணவே தவம் இருக்கிறாரென அவ்விளைஞர் இவர் முகம் நோக்கி” ஓர் ரகசியமான சொல்லை கூறிவிட்டு மேற்கில் மறைந்தார். அத்திசையில் ஆசிரியர் கரங்குவித்து அச்சொல்லே உபதேச மொழியென உணர்ந்து யோகநிட்டையில் அமர்ந்தனர். முப்பத்தைந்தாம் நாளிரவு இவர் தலைக்குமேல் பேரிடியோசை வெளிப்பட விண்ணும் மண்ணும் நடுங்கியது. “ஏகாதச உருத்திரர்கள் வருகின்றனர். நீ எழுந்து விட வேண்டும்” என அசரீரீ ஆணையிட்டது. “சுவாமிகள் அஞ்சாது முருகன் மொழிக்கே எழுவேன்” என “அவன் கட்டளையே எழுமின்!” எனும் ஒலி மீண்டும் ஒலிக்க இவரெழுந்து வெளியே வந்து சேர அனைவரும் சுவாமியை வணங்கித் தரிசித்து விபூதிபெற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

இத்தவத்தின் போது முருகன் நேரில் உபதேசித்த ஒரு மொழியே “தகராலயரகசியம்” எனும் சாத்திர நூலாய் ஆன்மாக்கள் நேத்திரம் திறக்கத் தோன்றியது. சுவாமிகள் எத்தனையோ தலம் சென்றும் ஒடுங்கா என் உள்ளம் பிரப்பன் வலசையில் ஒடுங்கியதால் அடியார் பிறப்பறுக்கும் இவ்வூர் என அலல்கல் சூட்டி மகிழ்ந்தார்கள்.

உள்ளபடி உன்னுபவர் உள்ளபடி உய்யவென உன்னு பெரிய
வள்ளல் முருகையா நடுநிற்கு நிலையைச் சொலிமறைந்த இடமும்
வெள்ளைகினர் புன்துயிலெடுப்பு கடல் வெள்ளலைகள் வீசு வளமும்
உள்ள வொர் பிரப்பன் வலசைப்பதியிதே உலகை உந்து மனமே.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt