முருகனை வேதம் அழைத்த திருநாமம்.

– எம்.எஸ்.சுப்பிரமணியம்

முருகா என்றால் மனம் உருகும். ஓடிவருவான் முருகன். வேதத்தின் அடி நாதமாம் ‘ஓம்’ எனும் பிரணவம். அந்த பிரணவத்திற்கே அற்புதமாக பொருள் சொன்ன ‘சாமிநாதன்’ அவன்.

வேதமாதா சிவனுக்காக ஒரு ருத்ரத்தையும், திருமாலுக்காக ஒரு புருஷஸுக்தத்தையும் வைத்து ஸ்தோத்திரம் செய்துள்ளாள். ஆனால் ஸுப்ரம்மண்யத்தை அதுபோல் அணுக முடிய வில்லை.

எனவே, உரத்த குரலில் மூன்றுமுறை சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! என்று அழைப்பதோடு நிறுத்திக் கொள்கிறாள், “மனம் வாக்கினில் தட்டாமல் நின்றது எது?” என்பார் தாயுமானவர். இங்கு வேத மாதாவின் வாக்கிலேயே தட்டி நின்றது முருகனின் திருநாமம் என்றால் “சுப்ரம்மண்யனை மிஞ்சிய தெய்வ மில்லை” என்னும் பாமரர் வாக்கு உண்மைதானே! சிவதத்துவமானவன் சுப்ரம்மண்ய உபாசனை சிவதத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது.

சிவதத்துவம் மூன்று வகை. அவை ஸகலா, நிஷ்களா, ஸகலாநிஷ்களா என்பன. பிரளயத்திற்குப்பின் உலக ஜீவராசிகள் உறங்கும் நிலையிலிருந்து, சிருஷ்டி சமயத்தில் உலகம் தோன்றுவதற்கு சிவம் விந்துவில் ஐக்கியமாகும். அப்பொழுது ஸகலா என்ற தத்துவத்தை ஏற்கிறது. எல்லா செயல்களுக்கும் சிவத்துள் ஐக்யப் பட்டு நிற்கும்போது சிவத்துக்கு நிஷ்கலா என்ற நிலை ஏற்படுகிறது. உறங்கியதும், உறங்காத நிலையிலுள்ள சிவத்திற்கு ஸகலாநிஷ்களா என்பது பொருந்துகிறது.

(இந்தநிலை திருமாலுக்கும் சொல்லப் படுவது-அதாவது அறிதுயில் என்பது) இதுமட்டுமன்றி சிவத்திற்கு மற்றும் மூன்று வகை பாவங்களும் சொல்லப்படுகின்றன. ஜோதி வடிவமான நிர்க்குண பரப்பிரம்மத் துக்கு ‘சுப்பிரம்மண்யசிவம்’ என்றும் ஆனந்த (இன்ப) மயமான நிர்க்குண பரப்பிரம்மத்திற்கு ‘சதாசிவம்’ என்றும்; எங்கும் நிறைந்த பிரம்மத் துக்கு ‘மகேசன்’ என்றும் சாஸ்திரம் கூறுகிறது.

வியாசர் சொல்வது பிரணவமூர்த்தி சுப்ரம் மண்யம். பிரம்மண்யம் நிலைக்க சுப்ரம் மண்யம் என்ற தெய்வம் தோன்றியது. ஸ்காந்தத்தில் சூர்ய நமஸ்காரம் எனும் ஆருண கேதுகசயனம் என்ற வேத பாகத்தில் ஸ்கந்தனின் பெருமை கூறப்படுகிறது.

வித்யாரண்யர் வேத பாஷ்யம் எழுதியவர். அவர் வேதங்களைக் காப்பாற்ற வந்த மூர்த்தி சுப்பிரம்மண்யம் என்கிறார். வேதங்களையே காக்க வந்தவரை சுப்ரம்மண்யோம் என்று மும்முறை உரக்க கூறியது பொருத்தம் தானே! இறைவனின் மூச்சுக்காற்றே வேதம். அதன் சாரமே பிரணவம் என்கிற ‘ஓம்’ அகர, உகர, மகாரம் இணைந்த பிரணவ ரூபமான சுப்பிரம்மண்யமே பிரம்ம, விஷ்ணு, ருத்ர வடிவமாகிறார்.

இவரே வேதத்தின் முடிவும் பொருளுமாவார். ரிக்வேதம் “குமாரம்மாதா யுவதிப்சமுப்தம்” என்ற வாக்கியமும், “அக்னிர் ஹோதாநோ அத்வரே” என்ற வாக்கியமும; ஸூர்ய நமஸ்காரத்தில் “சுப்ரம்மண்யோம்” என்ற வாக்கியமும் வேதகுகனாக சுப்ரம்மண்யமே விளங்குகிறார் என்பதை உணர்த்துவதாகும். யாகங்களில் ‘சுப்ரம்மண்ய ஆஹ்வானம்’, என்ற ஓர் பிரத்யேக கர்மா உண்டு. அதில் ‘ஏஹி சுபரம்மண்யோம்’ என்று திரும்பத் திரும்பத் திரும்ப கோஷம் எழுப்புவர். அப்போது, சுப்ரம்மண்யமே நம்முள் காட்சி தருவதாகத் தோன்றும்! வேதத்தை நிலைநாட்டிய குமாரில பட்டர் அவதரித்தது சுப்ரம்மண்யரின் அனுக்ரஹத்தினாலே!

புத்த மதத்தினர் வேதம் பிரமாண மல்ல என்றவர்கள். அவர்களுடன் வாதிட்டு வென்றார் குமாரில பட்டர். மேலும், வேதம் என்றும் நிலைத்திருக்க ‘வேதப்பிரமாண்யம்’, ‘பட்டவர்த்தகம்’. என்ற நூல்களையும் எழுதினார். ஆதிசங்கரர் திருச்செந்தூர் முருகனைப் பணிந்தார். தமது நோய் நீங்கப்பெற்றார். அப்பொழுது சுப்ரம்மண்ய புஜங்கம் என்ற துதிநூலைப் பாடினார்.

அதில் ஒரு இடத்தில் ‘மஹாவாக்யகூடம்’ என்று குறிப்பிடுகிறார். இதன் பொருள் விளக்கம்: சித் என்கிற பிரகாசம் பிரம்மத்தின் சொரூபம் என்கிற ‘பிரக்ஞானம் பிரம்மா’ என்ற மகாவாக்கியமும், ஆத்மாவும் பிரம்மமும் ஒன்றே என விளங்கும் ‘அயம்ஆத்மா பிரம்மா’ என்ற பிரமாண வாக்கியமும்; இவன் பிரம்மம் தான் என போதிக்கும் ‘தத்வமஸி’ என்ற உபதேச வாக்கிய மும் ‘அஹம் பிம்மாஸ்மி’ என்ற வாக்கியமும் நமக்கு விளங்கும்.

பொருளே அகண்ட ப்ரம்மமாகிய சுப்ரமண்யமாகும். நாரயணனே ஸ்கந்தன்: சுப்ரம்மண்யம் என்ற பெயரே நிர்மலமான ஜோதி என்று பொருள் தரும். மகாபாரதத்தில் பீஷ்மர் விஷ்ணுசகஸ்ர நாமத்தை சொல்லும்போது நாராயணனே ஸ்கந்தனாக (கலியுக வரதனாக) அவதரித்து விளங்குகிறார் என்று கூறுகிறார் வேதவியாசர்! ‘ஸ்கந்த; ஸ்கந்தரே’ என்று இரு நாமங்கள் விஷ்ணு சகஸ்ர நாமத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன, ‘ஸ்கந்ததே’ என்ற நாமாவிற்கு தர்மமார்க்கத்தை தாங்குகின்றவர் என்று ஆதிசங்கரர் பொருள் கூறுகிறார்! சங்கர ஸ்கந்த, ஸ்கந்ததர என்ற இரு நாமங்களும் சுப்ரம்மண்யத்தையே குறிப்பிடுகிறது. பாம்பன் சுவாமிகள்: குமாரஸ்தவத்தில் ‘ஷண்மத பதயே’, ‘ஷட்கோசபதயே’, என்று சுப்ரம்மண்யத்தைக் கூறியுள்ளார்.

மேலும் சுமாமிகள் “இன்பத்தையே இயல்பாகவுடைய சிவபரம்பொருளில் வேரூன்றி விளங்குபவன் சு+ப்ரம்ம+ந்யம்=சுப்ரம்மண்யம் என்றும் கூறியுள்ளார். கந்தபுராணம்: சுப்ரம்மண்யத்தை வழிபட் டால் இறைவன் அருளையும் அம்பாளின் கருணையையும் ஒருங்கே அடையலாம் என்கிறது.

“மக்கள் விரும்புவதைக் கொடுக்க எத்தனையோ தெய்வங்கள் உள்ளன. மிகவும் துயருற்ற வனுக்கும் விரும்பியதை தரும் குகன் என்னும் சுப்ரம்மண்யன் இருக்கிறானே. அவனைவிட வேறு தெய்வத்தை நான் அறி யேன்” என் கிறார். சுப்ரம்மண்ய புஜங்கத்தில் ஆதிசங்கரர்! வள்ளலார்: சுத்த அறிவே சுப்ரம்மண்யம் என்கிறார். சுத்த அறிவைத்தான் திருவள்ளுவரும் ‘வால் அறிவு’ என்கிறார்.

இறைவனை வாலறிவன் என்கிறார். சுப்ரம்மண்யனை ‘ஞானவேலவன்’ என்றும் சொல்கிறோம் அல்லவா? டாக்டர். எம்.டி. பால் என்ற மேனாட்டு அறிஞரும் “ரிஸீஷீஷ்றீமீபீரீமீ வீs ஜீஷீஷ்மீக்ஷீ” என்கிறார். வள்ளலார் மேலும் சுத்த அறிவை விளக்கு கிறார். “பிரம்மத்தை அறியத் தொடங்கினேன். விக்கிரக ஆராதனை செய்வோர் அதனை செய்தல் வேண்டும்.

விக்கிரகம் என்பது விசேஷ இடம். மனிதர் முதலியோர் இருப்பது ஜீவதேகம். விக்கிரகத்தில் பிரம்மப் பிரகாசம் இருந்து வெளிப்படுவதற்கு வேததேகங்கள் அருள்கின்றன. (இதனையே ஐந்து வியூகங்களில் ஒன்றாக ‘அர்ச்சை’ எனப்படுகிறது) இதனால் பிரம்ம பிரகாசம் எளிதில் வெளிப்பட்டு அனுக் கிரகிக்கும். இந்த சுத்த அறிவே சுப்ரம்மண்யம்” என்கிறார். நமது புருவமத்தியில் ஆறு ஆதார சக்கரங் களில் ஒன்றாகிய ஆக்ஞா சக்ரம் உள்ளது. அங்கு ஆறுபட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசத்துடன் விளங்குவதும், நமது தேகத்திலுள்ள ஆறு அறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேகம் என்பதையும் ‘ஷண்முகம்’ என்பார்கள்.

இதுவன்றி நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்று இடம் தாண்டி அநாகதமாகிய (சுவாதி ஷ்டானம், மணிபூரகம், விசுக்தி கடந்து) இருதய ஸ்தானத்தில் இடதுபுறம் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கிறது! இதை சுப்ரம்மண்யம் என்று சொல்வார்கள்.

எனவே, நம் உள்ளக் கோயிலில் குடி கொண்டிருப்பவன் சுப்ரமண்யனே! சிற்பநூல்களில் சுப்ரம்மண்யனே: முருகன் தனது இடக் கையினை இடுப்பில் வைத்துக் கொண்டு வலக்கையை அபயம் காட்டும் நிலையில் ஏந்திக்கொண்டு அருளை பொழியும் கண்களுடன் விளங்குகிறான். இந்த உருவமே சுப்ரம்மண்யன் என்கின்றன சிற்ப நூல்கள்.

‘பிருஹத்சம்ஹிதை’ என்ற நூல் சுப்ரம்மண் யனை இளைஞனாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் கையில் வேலுடன் விளங்குமாறு அமைக்க வேண்டும் என்கிறது. இங்கு நம் மனமே முருகனின் மயில் வாகனம். “மனமே முருகனின் மயில் வாகனம் என்மாந்தளிர் மேனியே குகனாலயம்” என்று திரைஇசைப்பாடலே உள்ளது.

மனிதன் எப்பொழுதும் தன்னைப் பற்றி நினைத்தே கர்வப்படுபவன்! தன்னால் எதுவும் முடியும் என்று ஆணவத்தில் மிதப்பவன்! தனக்குள் (பிரம்மம்) ஆண்டவன் இருப்பதை உணர்வதில்லை! அவனுக்குள் இருக்கும் அவனது ஆத்மாவே அவனது உண்மை வடிவம் என்பதை அவன் தெரிந்துகொள்ள வேண்டும். கடவுள் அந்த பண்பட்ட மனத்தை வாகன மாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதையே கர்வத்துடன் ஆடும் மயில் மீது அமர்ந்து சுப்ரம்மண்யர் நமக்கு உணர்த்துகிறார்.

இருண்டு திரண்டு சில நிமிடங்களே இருக்கும் மேகங்களைக் கண்டு மயில் மகிழ்ச்சி கொள்கிறது; ஆடுகிறது. அந்த மேகங்கள் கலையும்போது அதன் மகிழ்ச்சியும் மறையும். விரிந்த தோகையும் சுருங்கி விடும். மனித மனமும் உலகின் அற்ப சொற்ப இன்பங் களை பெரிதாய் எண்ணி அதை அடைய ஆட்டம் போடுகிறது.

அந்த இன்பங்கள் நீர்த்துப் போகும்போதும் மனம் முறிந்து போகிறான். ஆகவே, அவனது மனதையே தனது வாகன மாக்கி சுத்த அறிவு அருள்பவனே சுப்ரம்மண்யன்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்! சுப்ரம்மண்யோம்!

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt