சண்முக கவச மகிமை!

இவ்வுலகத்தில் பிறந்த உயிர்கள் எல்லாம் அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். இதுவே, ஞானியர்களின் கருத்து. அந்த வகையில் மனிதனை இரண்டு வகை யான துன்பங்கள் வருத்தும் ஒன்று உள்ளத் துன்பம் (மனதில் தோன்றும்) மற்றொன்று உடல் துன்பம்.

இந்த இரண்டு துன்பங்களையும் கண்டு அஞ்சி மிரள்கின்றது மானுட சமுதாயம் இந்த இரண்டினையும் தீர்க்க கூடிய உபாயம் உண்டா என்று நமது முன்னோர்கள் ஆராய்ந்து பல அரிய உண்மைகளை கண்டு பிடித்தனர். அத்த கைய உண்மைகள் பின்னால் பாடல்களாய், பாடங்களாய் மனிதர்களை உயர்த்தும் படிக்கட்டுகளாய் மிளிர்கின்றன.

சைவத்தில் உடற்பிணி கண்ட தருமசேனர் தமது தாய் சமயமாம் சைவத்திற்கு திரும்பி “கூற்றாயினவாறு”  என்னும் பதிகம் பாடி தமது சூளை நோய் நீங்க பெற்ற வரலாறு நமக்கு தெரியும். இழந்த கண்களை பெறுவதற்காக பல ஸ்தலங்களைப் பாடி காஞ்சியையும், திரு ஆருரை யும் பாடி பலன் பெற்றார் சுந்தரமூர்த்தி நாயனார். அந்த வகையில் பல ஆண்டுகட்கு முன்னால் “சஷ்டி கவசம்” என்ற மந்திர நூலை இந்த உலகிற்கு நல்கினார் தேவராய சுவாமிகள்.

ஆறுபடை வீடுகளில் அமர்ந்து ஆறு ஆதாரங் களில் நிறைந்து ஆட்சி செய்யும் நாயகனாக, அழகனாக, குழகனாக விளங்கும் முருகப்பெரு மானை வேண்டி ஆறு கவசங்களை ஆறுபடை வீடுகளுக்கு தந்தருளினார் தேவராய சுவாமிகள்.

இமயம் முதல் குமரி வரை ஏன் கடல் கடந்த நாடுகளிலும் கூட தேவராய சுவாமி களின் சஷ்டி கவசம் பாராயணம் செய்வது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. எங்கே ஷஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படுகிறதோ. அங்கே ஷஷ்டி நாதன் சண்முகநாதன். சற்குருநாதனாக வந்து அருள் புரிவான்.

ஷஷ்டி கவசத்தின் மேன்மையை உணர்ந்த பாம்பன் சுவாமிகள் ஆறுபடை விட்டு சஷ்டி கவசத்தையும் முப்பத்தி ஆறு முறை இடைவிடாது ஓதி ஜபித்து வந்தார். சஷ்டி கவசத்தின் முழுபலனையும் முருக பக்தர்கள் எளிய முறையிலே பெறுவதற்கு என்ன வழி என்று யோசித்து “சண்முக கவசம்” என்னும் மா மந்திர நூலை அருளி செய்தார்.

ஆம்! சஷ்டி கவசம் ஆறு படை வீட்டு பாடல்களை யும் 36 முறை படிப்பதற்கு குறைந்த பட்சம் 1 மணி நேரம் ஆகும். ஆனால்  நம் போன்றோர் எளிய முறையில் பாராயணம் செய்வதற்காக பாம்பன் சுவாமிகள் அருளிச் செய்த சண்முக கவசத்தை பாராயணம் செய்வதற்கு மிக மிக குறைந்த நேரமே ஆகும்.

எவர் ஒருவர் சண்முக கவசத்தை முறையாக ஆறுமுறை பாராயணம் செய்கிறாரோ அவர் உடற்பிணி நீங்கி உளம் களிப்பது உறுதி. எனவே தான் குருநாதராகிய  நமது ‘பாம்பன் சுவாமிகள்’ என்னை ஆதரித்து அருள் பரம ரகசிய சக்தி எனை நம்பினாரை ஆதரியாது நிற்குமோ” ஐயம் வேண்டாம். என்று அருளிச் செய்தார்.

இத்தகைய மகிமை வாய்ந்த சண்முக கவசத்தை பற்றி பாம்பன் சுவாமிகள் குறிப் பிடுகையில் “பரிவிற் பெரியோய்” நீ, பாராய ணம் செய்கின்ற “சண்முக கவசம்” ஒன்றே உன்னை அத்தீவிரகதியில் சேர்க்கும் என்று சுப்பிரமணிய ஜோதிடருக்கு அருளினார்.

போர்க்காலங்களில் தம்மை காத்துக் கொள்வதற்காக வீரர்கள் இரும்பு கவசம் அணிந்து கொள்வார்கள். அது போல இந்த உலக வாழ்க்கையாகிய போரை எதிர்கொள் வதற்கு நாமும் இந்த சண்முக கவசம் அணி வோம். அதாவது பாராயணம் செய்வோம்.

இந்த சண்முக கவச பாராயணம் பேரழிவி லிருந்து பெரும் இன்னலிருந்து கொடிய துன்பத்திலிருந்து தீராதப் பிணியிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் தாய். எனவேதான் “சண்முக கவசமின்றி தரணியில்  மந்திரம் இல்லை” என்பார் உண்மை உணர்ந்த பெரியோர்கள்.

சண்முக கவசம் பாராயணம் செய்கின்ற போது பக்தி சிரத்தையுடன் பன்னிருகை பரமன் பாத மலர்களை பணிந்து பாராயணம் செய்தல் வேண்டும் சுவாமிகள் அருளியது போலவே பாடல்களை ஓதுதல் நலம் பயக்கும். சீர்களை பிரித்தோ, கூட்டியோ ஓதுதலை தவிர்ப்பது நலம். சண்முக கவசம் ராகத்துடன் பாடப்படுவதை தவிர்த்தல் நலம். ஈரேழு பதிநான்கு லோகங்களையும் படைத்து, காத்து, அழித்து, மறைத்து அருளுகின்ற குமார பரமேஸ்வரை நமது குறைகள் தீர்க்க, குற்றம் ஒழிய, குணமடைய, நன்மை பெருக வேண்டும். பாவத்திலே ஓதுதல் வேண்டும்.

இந்த முறையில் ஓதி, நூலாசிரியராக விளங்கக்கூடிய பாம்பன் சுவாமிகளின் முறிந்த கால் எலும்பை இணைத்தற்கு உதவினர்.

சின்னசாமி ஜோதிடர் போன்ற அருளாளர்கள். எனவே அன்பர்களே வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் எல்லா விதமான பிணிகளை நீக்கிக் கொள்ள பிணியின்றி நாம் பிழைத்து கொள்ள பிணி நீக்கும் பெருமானாம் பீடுடைய நாயகனாம் பன்னிருகரத்தன்னல், பாத பங்கையங்களை மனத்திருத்தி பாவம் போக்க வந்த பாம்பன் சுவாமிகளின் திருவடி மலர்களை நெஞ்சில் நிறுத்தி சண்முக கவசம் ஓதுவோம். சகல நன்மைகள் பெறுவோம் என்று கூத்திட்டு களிப்போமாக.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt