ஜோதிர் லிங்கம்!

ஜோதி என்றால் ஒளி. ஜோதிர் லிங்கம் என்றால் ‘ஒளிமயமான லிங்கம்’ என்று பொருள் கொள்ள லாம். ஆதியும் அந்தமும் இல்லா சிவபெரு மான், லிங்கேஸ்வரராக கோவில் கொண்டிருக் கும் திருத்தலங்கள் ஏராளம்.

ஆனால் ஜோதிர் லிங்கங்களாக அருட் கோலம் கொண்டிருக்கும் திருத்தலங்கள் பன்னிரண்டாகும். தன்னடியார் களின் துன்பங்களை நீங்கி, அருள் புரிந்த சிவபெரு மான் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்கி அனை வரையும் காத்தருள கோவில் கொண்ட திருத்தலங்களே இவை ஆகும். அத்தலங்களின் சிறப்பையும், ஈசனை தரிசிப்பதால் உண்டாகும் பலனையும் இனி பார்ப்போம்.

1.ஸோமநாதம்:
குஜராத் மாநிலத்தில் உள்ளது. வீராவல் நிலையத் திலிருந்து 3 கிமீ தூரத்தில் உள்ளது. வாகன வசதியும் உண்டு. தக்ஷனால் சந்திரனுக்கு ஏற் பட்ட சாபத்தை போக்கி, பிறைச்சந்திரனை தன் ஜடையில் சூடினார் சிவபெருமான். சோம னான சந்திரனை இவர் சூடியதால் சோம நாதர் என்று பெயர் கொண்டார்.

இவரை தரிசித்தால் சகல பாபங்களும் விலகி விருப்பங்கள் நிறைவேறும். மோட்சத்தை யும் அடையலாம். இங்கு ஒருவர் 6 மாதங்களுக்கு தங்கி நீராடினால் தீராத நோயும் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஸௌராஷ்ட்ரதேஸே விஸதேதிரம்யே ஜ்யோதிர்மயம் சந்த்ரகலாவதம்ஸம்
பக்திப்ரதானாய க்ருபாவதீர்ணம் தம் ஸோமநாதம் ஸரணம் ப்ரபத்யே
புனிதமும் அழகும் நிறைந்த ஸௌராஷ்டிர தேசத்தில் ஜோதிமயமாக இருப்பவரும் பிறைச் சந்திரனைத் தலையில் சூடியவரும், எல்லை யற்ற கருணை காரணமாக எல்லோருக்கும் பக்தியை அளிப்பதற்காகவே அவதாரம் செய்தவரும் ஆகிய ஸோமநாதர் என்ற சிவ லிங்கத்தைச் சரணடைகிறேன்.
2 மல்லிகார்ஜுனம் ஸ்ரீ சைலம்
ஆந்திர மாநிலத்தில் உள்ளது இத்லம். விஜய வாடா, கர்நூல், திருப்பதி முதலிய ஊர்களில் இருந்து பஸ் வசதி உள்ளது. முருகப்பெருமான் தம் பெற்றோர்களை விட்டு பிரிந்து சென்றார். தம் மகனை காணும் பொருட்டு, கிரௌஞ்ச மலையை நோக்கி சென்ற அம்மை அப்பர் மல்லிகார்ஜுனராக இங்கு தங்கினர்.  மல்லி கார்ஜுன ஜோதிர்லிங்கத்தின் வரலாற்றை ஒருவன் கேட்டாலே, வாழ்க்கை பந்தங்கள் எல்லாம் விலகுகின்றன. இறைவனின் மெய்யடியானாக மாறுகிறான்.
ஸ்ரீ சைலஸ்வரூபே விபுதா திஸங்கே துலாத்ரி துங்கேபி முதா வஸந்தம்
தமர்ஜீனம் மல்லிக பூர்வமேகம் நமாமி ஸம்ஸார ஸமுத்ர ஸேதும்
மிகவும் உயர்ந்த ஸ்ரீ சைலம் என்ற மலையில், அறிஞர்களின் சத்சங்கத்தில் மிகவும் மகிழ்ச்சி யோடு வசிப்பவரும், சம்சாரம் என்னும் பெரும் கடலைக் கடப்பதற்கு உதவும் அணை போன்றவருமாகிய மல்லிகார்ஜுனர் என்ற சிவலிங்கத்தை வணங்குகிறேன்.
3. மகாகாளம் (உஜ்ஜைனி)
போபால் ரயில் நிலையத்திலிருந்து செல்ல வேண்டும். விண்ணிலே தாரகலிங்கம், பாதாள லோகத்தில் ஹாடகேசுவர லிங்கம், ம்ருத்யு லோகத்தில் மகாகாளலிங்கம். வேதத்தின் எதிரி யான தூஷன் என்றும் அரக்கனை சம்ஹாரம் செய்து தன்து பக்தர்களையும் உஜ்ஜைனி நகரத்தை யும் காத்தவர். இத்திருக்கோவில் சிப்ரா நதிக் கரையில் உள்ளது. இங்குள்ள நதியில் மூழ்கி, மகாகாளரை வணங்கி, காளியையும் தரிசனம் செய்தால் கல்வியும், அறிவும் பெருகி, அசுர குணம் மறையும் என்பது அனுபவ உண்மை.
அவந்தி காயாம் விஹிதாவதாரம் முக்தி ப்ரதானாய ச ஸஜ்ஜனானாம்
அகாலம் ருத்யோ: பரிரக்ஷணார்த்தம் வந்தே மஹாகால மஹாஸுரேஸம்
நல்லவர்களுக்கு முக்தி அளிப்பதற்காக அவந்திகா (உஜ்ஜைனி) நகரத்தில் அவதாரம் செய்தவரும், தேவர்களுக்குத் தலைவனுமாகிய மகாகாளேஸ்வரர் என்ற சிவலிங்கத்தை எனக்கு அகால மரணம் நேராமல் இருக்கும் பொருட்டு வணங்குகிறேன்.
4. ஒங்காரம்
காண்ட்வா ரயில் பாதையில் மோரின்டா ரயில் நிலையத்திலிருந்து 20 கி.மீட்டரில் உள்ளது. பஸ் வசதியும் உண்டு. நாரத மகரிஷி விந்திய மலையில், ஈசனை வழிபட்டு வந்தார். அப்போது விந்திய மலை தான் சிறந்தது என்று ஆணவம் கொண்டது. நாரதர் மேருமலையைப் பற்றி எடுத்துச் சொன்னார். விந்தியனும் நர்மதை நதிக்கரையில் சிவப்பெருமானை வழிபட்டது. இறைவனும் அருள்பாலித்தார். பக்தர்கள் கோரிக் கைகளை நிறைவேற்றும் இவரே ஸ்ரீ ஓங்காரேஸ்வரர்.
ஓங்காரேஸ்வரரின் புனித கதையைக் கேட் டாலோ, படித்தாலோ வாழ்வில் எல்லா வளங் களும் பெருகும். அவரைத் தரிசித்தால் பிறவிப் பிணி ஆறும். காவேரிகா நர்மதையோ: பவித்ரே ஸமாகமே ஸஜ்ஜனதா ரணாய
ஸதைவ மாந்தாத்ருபுரே வஸந்தம் ஓம்கார மீஸம் ஸிவமேக மீடே
நர்மதை நதி இருக்கும் தூய்மையான இடத்தில், நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக எப்போதும் மாந்தாத்ரு என்ற ஊரில் வசிப்பவ ரும், ஓங்காரேஸ்வரர் என்ற சாத்விதீ யருமான (இரண்டற்ற) சிவபெருமானை வணங்குகிறேன்.
5. வைத்தியநாதம்:
மத்திய பிரதேசத்தில் பரலி என்னும் தலத் தில் உள்ளார். ஓர் முறை ராவணன் கைலாயத் தில் இருந்து சிவலிங்கத்தை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பினான். சிவபெருமா னும் வழியில் எங்கும் வைக்கக்கூடாது என்று நிபந்தனை விடுத்திருந்தார். ராவணனோ மாடு மேய்க்கும் சிறுவனிடம் சிறிது நேரம் வைத்து இருக்கும்படி கொடுக்க, அவன் கீழே வைத்து விடுகிறான். அவரே ஸ்ரீ வைத்திய நாத சுவாமி யாக அங்கு தங்கி விடுகிறார். இவரை வணங்கினால் மன மாசுகள் அகல்வ துடன் நல்ல ஆரோக்கியம் உண்டாகும். மேலும் பரமசுகமும் முக்தி முக்தியும் கிடைக்கும்.
பூர்வோத்தரே ப்ரஜ்வலிகாநிதானே ஸதா வஸந்தம் கிரிஜா ஸமேதம்
ஸுராஸிராராதித பாதபத்மம் ஸ்ரீ வைத்யநாதம் தமஹம் நமாமி
ஈசான திசையில் கொழுந்து விட்டெரியும் தீ ஜ்வாலை உள்ள மயானத்தில் வசிப்பவரும், எப்போதும் கிரிஜா என்ற பார்வதி தேவியுடன் சேர்ந்திருப்பவரும், தேவர்களாலும் அசுரர் களாலும் வணங்கப்பட்ட திருவடிகளை உடையவருமாகிய ஸ்ரீ வைத்தியநாதர் என்ற சிவலிங்கத்தை நான் வணங்குகிறேன்.
6. பீமசங்கரம்:
பூனா ரயில் நிலையத்திலிருந்து பஸ் வசதி உண்டு. ப்ரம்மாவிடம் வரம் பெற்று அனை வரையும் துன்புறுத்தி வந்த கும்பகர்ணனின் மகன் பீமாசுரனை சம்ஹாரம் செய்தவர் இவர். பக்தர்களை ரக்ஷித்து, நன்மைகள் அளிக்கும் இவரை வணங்கினால் மனிதர்களின் சிறந்த விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்.
யம் டாகினீ ஸாகினி காஸமாஜே நிஷேவ்யமாணம் பிஸ்தாஸனைஸ்ச
ஸதைவ பூமாதி பதப்ரஸித்தே தம் ஸங்கரம் பக்தஹிதம் நமாமி
டாகினீ, சாகினீ முதலிய பூதகணங்கள் வசிக்கும் இடத்தில், அரக்கர்களால் வணங்கப் படுபவரும், என்றும் பீமேஸ்வரர் என்று புகழப் படுபவரும், பக்தர்களுக்கு நன்மை செய்பவரு மாகிய சங்கர பகவானுக்கு நமஸ்காரம் செய்கிறேன்.
(தொடரும்)

 

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt