திண்டல் கிரி வேலாயுதசுவாமி

-முனைவர் சாந்தி விஸ்வநாதன், கோவை.

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கு ஏற்ப, மேற்கு மலை தொடர்ச்சி முழுவதிலும் கந்தக் கடவுளாம் குமரக்கடவுள் குடிகொண்டிரு¢கும் திருக்கோவில் களுக்கு பஞ்சமே இல்லை. அவ்வரிசையில், ஈரோடு மாவட்டத்தில், அழகிய ஓர் திண்டு போல் தோற்றம் அளிக்கும் சிறு குன்றின்மேல் அழகிய ஓர் சூழலில் அமைந்துள்ளது.  திருக்கோவில். சுமார் 750 வருடங்களுக்கு மேல் பழமையான கோவிலாகும். அடிவாரத்தில் அரச மரத்தின் கீழும், படிகள் ஆரம்பிக்கும் இடத்திலும் யானை முகத்தோனை தரிசிக்கலாம்.

தந்தி முகத்தோனை வணங்கி 109 படிகள் ஏறிச் சென்றால், அழகே உருவான தெய்வீக குழந்தையான முருகப்பெருமான் கையில் வேலுடன் ஈசான்ய திசையை நோக்கி அருட்காட்சி தருகிறார். தனியதோர் அறையில் வள்ளி தெய்வானையுடன் உற்சவமூர்த்தி காட்சி தருகிறார். 1977, 1991, 2001, 2011 என்று முறையாக நான்கு முறை கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது.

தினமும் நான்கு கால பூஜைகள் செவ்வனே நடைபெறுகிறது. அதுமட்டுமா அமாவாசை, கிருத்திகை, சஷ்டி, தைபூசம், பங்குனி உத்திரம் போன்ற விசேஷ நாட்களிலும் விசேட பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு மாதமும் சஷ்டி அன்று பக்தர்கள் பால்குடம் எடுக்கிறார்கள். மேலும் பங்குனி உத்திரம், ஆடி 18, தைபூசம் போன்ற நாட்ளில் தீர்த்த காவடி யும் எடுத்து வருகின்றனர். முருகப் பெருமா னுக்கு தங்க ரதமும் உண்டு.

சத்ரு சம்ஹார அர்ச்சனை: முருகப் பெருமானுக்கு சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை மிகவும் விசேஷமானது. நமது வாழ்க்கையில் சத்ருக்களால் ஏற்படும் உபாதைகள் மற்றும் தீய தொல்லைள் நீங்க சத்ரு சம்ஹார திரிசதி அர்ச்சனை செய்து வழிபட்டால் நிவர்த்தி கிடைக்கும். இக் கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் 10.30, 12.30, 5.30 மற்றும் 7.30 மணிக்கு முறையே நான்கு காலங்களிலும் சத்ரு சம்ஹார த்ரிசதி அர்ச்சனை செய்யப்படுகிறது.

இக்கோவிலுக்கு பின்புறத்தில் தன்னாசி யப்பர் ஜீவசமாதி அமைந்துள்ளது. இச்சித்தர் பெருமான் இங்கு தங்கி முருகப்பெருமானை வழிபட்டதாக கருதப்படுகிறது. இங்கு பக்தர் கள் அமர்ந்து தியானம் செய்தும் வழிபட்டும் செல்கின்றனர். கோவிலை சுற்றி ஊஞ்சல் மரம் இருப்பதால், அதுவே ஸ்தல விருக்ஷமாக கருதப்படுகிறது. மேலும், சற்று இறங்கி சென் றால் அங்கு ஓர் தீர்த்த சுனையும் உள்ளது.

மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் என்று சிறப்பு மிக்க இத்தலத்திற்கு தனிப்பட்ட திருப்புகழ் ஏதும் இல்லாவிடினும் கவிஞர்களால் தொகுக்கப் பட்ட 100 பாடல்கள் கொண்ட திண்டல்கிரி வேலாயுதசாமி சதகம் என்று ஒன்று உள்ளது. மேலும் இத்திருக் கோவிலில் உள்ள முருகப் பெருமான் பலர் கனவில் வேட உருவத்திலும், குழந்தை வடிவிலும் சென்று காட்சி தந்து கோவிலுக்கு வரவழைத்து ஆட்கொண்ட தாகவும் அர்ச்சகர் திரு செந்தில் நாத குருக்கள் தெரிவித்தார். இவ்வருள் வள்ளலை வாய்ப்பு கிடைப்பின் அவசியம் தரிசிக்கலாமே.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt