திருநீலநக்க நாயனார்

திருக்குறள் தென்றல் த.தங்கமணி, (மஸ்கட்)

வெகுளாமை என்றால் கோபப்படாமல் இருப்பது என்று அர்த்தம்.

“கோபம் இருக்கும் இடத்தில்தான் குணம் இருக்கும்” என்று கோபத்தை ஒரு நல்ல குணமாக கருதக்கூடிய வர்கள், நிலத்தை கையால் அடித்தால் அடிக் கின்ற கை எப்படி வலியிலிருந்து தப்ப முடி யாதோ!… அது போல கெடுதலை அடைவதில் இருந்து தப்ப முடியாது என்று திருக்குறள் சொல்கின்றது.

சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
– 307-வெகுளாமை

ஆனால், இன்று நம்மில் பலருக்கு கோபம் இருக்கத்தான் செய்கின்றது. அது நம்முடன் இருக்கக்கூடிய இயல்பான ஒரு விஷயம் என்று அதைப்பற்றி அக்கறை இல்லாமல் இருப்பதால், நாம் இழப்பது பல விஷயங்கள்.

இப்படி தனக்கு வரும் கோபத்தைப்பற்றி கவனிக்காதவரைப்பற்றியும், கோபம் தவிர்த் தால், மனதில் நினைத்தது, நினைத்த படியே நடக்கும் என்று சொல்லும் திருக்குறளின் கருத்துக்கள் உண்மையே என்று உணர்த்திடும் சம்பவத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ள திரு நீலநக்க நாயனாரின் வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை தெரிஞ்சுக்கலாம் வாங்க…

தஞ்சை மாவட்டம், நன்னிலம் அருகில் ஏழு மைல் தொலைவில் உள்ளதுதான் சாத்தமங் கலை என்னும் ஊர் அங்குள்ள சிவன் கோவி லுக்கு அயவந்தி என்று பெயர். அயன் என் றால் பிரமன் என்று பெயர். பிரமன் வந்து வழிபட்டதால், இக்கோவிலுக்கு அயவந்தி என்று பெயர் வந்ததாக சொல்லப்படுகின்றது. இந்த சாத்தமங்கை என்னும் ஊரில், அந்தணர் குலத்தில் பிறந்து, ஆகம விதிகளின்படி சிவ பூசைகள் செய்து வந்தார் திருநீல நக்கநாய னார். நீதி நூல்களில் சொல்லப்பட்டதைப் போன்று வாழ்ந்தார் என்று இவரைப் பற்றி சேக்கிழார் பதிவுச் செய்துள்ளார். இவர் செய் யும் சிவபூசைகளுக்கு, இவரது துணைவியார் உதவியாக இருப்பார்.

திருஞான சம்பந்தரைப் பற்றி அறிந்து, அவரை காணவேண்டும் என்று மிக ஆவலு டன் இருந்தார். ஒருமுறை அவயந்தி கோவி லுக்கு வந்த திருஞானசம்பந்தரை வரவேற்க வழிநெடுகிலும் வாழை மரங்களையும், தோர ணங்களையும் கட்டி, மிகுந்த மரியாதையுட னும், பக்தியுடனும் வரவேற்றார். அவருடன் வந்த நீலகண்ட யாழ்ப்பாணரை அன்பு கலந்த மனத்துடன் வரவேற்றார்.

தடபுடலாக, அனைத்து சிவபக்தர்களுக் கும் விருந்து நடந்தது. அன்றிரவு அனைவ ருக்கும் தன் வீட்டிலேயே தங்க இடம் தந்தார். திருநீலகண்ட யாழ்ப்பாணரை, மற்ற குலத்தை சார்ந்தவர் என்று நினைக்காமல், தன் வீட் டின் யாகச்சாலையில் தங்க அனுமதித்தார். இதையெல்லாம் கவனித்த திருஞானசம்பந் தர், நீதி நூல்களில் சொல்கின்றபடி வாழ்கின் றவர் திருநீலநக்கநாயனார் என்பதை கண் கூடாக கண்டு உணர்ந்தார்.
மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர் கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழ்அல்லவர்.
973-பெருமை

மேல்சாதி, கீழ்சாதி என்று பார்க்காமல், மேன்மையான குணங்கள் இருப்பவர் மேலா னவர்கள்தான் என்று சொல்லும் உலகத்திற்கு பொதுவாக நீதி நூலான திருக்குறளின் கருத் தின்படி வாழ்ந்த திருநீலநக்க நாயனாரை, தன்னுடைய திருமணத்தின் போது நடக்கும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் தலைமை யேற்று நடத்தும் பொறுப்பை தந்தார்.

இப்படி சிவபக்தியில் மனதை ஈடுபடுத்திக் கொண்டு, சிவனடியார்களுக்கு பணிவிடை செய்வதும், ஆகம விதிகளின்படி சிவபூசை செய்வதுமாக வாழ்ந்து வந்தார் திருநீல நக்கநாயனார்.
ஒருநாள் வீட்டில் சிவபூசை செய்து இறை வனை வழிப்பட்டார். மேலும் அவயந்தி கோவிலுக்கு சென்று பூஜை செய்ய விரும்பி னார். பூசை செய்ய தேவையானப் பொருட் களை எடுத்துக் கொண்டு உடன் சென்றார் அவரது துணைவியார். திருநீல நக்கநாயனார் மெய்மறந்து பூசை செய்துக்கொண்டு இருக் கும்போது, உடன் இருந்து உதவிய துணைவி யார், சிவலிங்கத்தின் மீது ஒரு சிலந்தி இருப் பதைப் பார்த்து, அதை ஊதித் தள்ளினார்.

ஆனால் இதைக்கண்ட நாயனார் உலகை காக்கும் இறைவனின் மேல் உன் எச்சில் பட்டுவிட்டது. இது மன்னிக்க முடியாத குற்றம் என்று மிகவும் கோபம் அடைந்தார். அந்த கோபத்தில் எனக்கும், உனக்கும் ஒத்து வராது என்று சொல்லிவிட்டு மனைவியை கோவிலிலேயே விட்டுவிட்டு வீட்டிற்குச் சென்று விட்டார்.

நீதி நூல்களில் சொன்னபடி மற்றவர் களிடம் கோபப்படாமல் வாழ்ந்த திருநீல நக்கநாயனார். தன் கோபம் தன் மனைவியை பாதிக்கும் என்று நினைக்காமல் கோபப்படு வது சரியா? இதைத்தான் உலக பொதுமறை யான திருக்குறளும் கேட்கின்றது.

செல்லிடத்துக்காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

301-வெகுளாமை

நாம் கோபப்பட்டால் நமக்குத்தான் பாதிப்பு என்று தெரிந்தால், யாரும் மற்றவர்களிடத் தில் கோபப்படுவதில்லை, ஆனால் நம்மு டைய கோபத்தால் நமக்கு பாதிப்பு இல்லை ªன்றால், நாம் மற்ஹரர்களிடத்தில் கோபப் படுகின்றோம். இது சரியில்லை. நமக்கு ஏற் படும் பாதிப்பைவிட, கோபத்தால் மற்றவர் களுக்கு நாம் ஏற்படுத்தும் பாதிப்புதான் அதிகம் என்கிறது நம்ம திருக்குறள்.

செல்லா இடத்த்துச் சினம் தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

302-வெகுளாமை

யாருக்கும் கோபத்தால் பாதிப்போ அல் லது தீமையோ வராமல் காக்க ஒரே வழி கோபத்தை மறந்து விடுவதுதான், ஏனென் றால் கோபம் வந்தால், அதனால் கெடுதல் தான் வரும் என்கிறது நம்ம திருக்குறள்.
கோபம் வந்தால், அந்த கோபத்தை மறந்து விடுங்கள் என்கிறது இறைவனால் அனு மதிக்கப்பெற்ற திருக்குறள். ஆனால் கோபம் தான் கண்ணை மறைக்குமே!… யார் போய் திரு நீலநக்க நாயனாரிடம் இதைச் சொல்லுவது.

கோபத்துடன் வீட்டிற்கு சென்ற நாயனார், சிவபூசையில் தவறு நடக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி சொல்வதற்காகதான், தான் கோபத்துடன் நடந்து கொண்டதாக மனம் அமைதி அடைந்து தூக்கிவிட்டார்.

கோவிலில், பலருக்கு மத்தியில், நீ எனக்கு வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு சென்று விட்ட கணவரை எப்படி சமாதானப் படுத்துவது, இனி நம்முடைய வாழ்க்கை என்ன வாகும்? என்று மனகலகத்துடன் துடிதுடித் துப்போன நாயனாரின் மனைவி, இறைவனை மனதார வேண்டினார். ஆனால் இப்படி நடந்துக் கொண்டால், உடனே அம்மா வீட்டிற்குச் சென்று, கணவர் மன்னிப்பு கேட் டால்தான், மறுபடியும் வருவேன் என்று கோபத்துடன் இருப்பர் சில பெண்கள்.

உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

– 309-வெகுளாமை

ஆனால் “கோபப்படாமல் இருந்தால், நாம் மனதில் நினைத்தது எல்லாம் உடனே நடக் கும்” என்று சொல்கின்றது நம்ம திருக்குறள். அன்று மதுரையில் படித்த புலவர்கள் அனு மதிக்காத திருக்குறளை, அசரீரியாக இறை வன் அனுமதித்தார். அத்திருக்குறள் சொன்ன கருத்துக்கள் பொய்யாகி போகாது தானே…

கோபப்படாமல் தனியாக கோவிலில் இருந்த நாயனாரின் மனைவி, மனதில் நினைத்தது என்ன?

1) தன்னுடைய கணவர் கோபம் தணிந்து, தன்னை ஏற்றுக்கொண்டு அன்பு செலுத்த வேண்டும்.

2) தன்னால், சிவபூசைக்கு ஏற்பட்ட களங்கம் போய், இறைஅருள் தன் கணவருக்கு கிடைக்க வேண்டும்.

இந்த இரண்டும் உடனடியாக நடக்க வேண்டும். கோபப்படாமல் இருந்தால் இது எப்படி நடக்கும் என்று நம்மில் சிலர் நினைப் பது உண்டு. ஆனால் இறைவன் நடத்திக் காட்டினார்.

வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த, திரு நீலநக்கநாயனாரின் கனவில் தோன்றிய இறைவன், ‘‘அன்பனே!…. இதோ பார்; உன் மனைவி ஊதிய இடந்தவிர மற்றைய இடங் களில் கொப்புளம்” என்று தன் திருமேனியை காட்டியருளினார்.

எத்தனையோ நாள் சிவபூசை செய்தும் தோன்றாத இறைவன், இன்று தன் கனவில் தோன்றியதை பார்த்து, மகிழ்ந்தார், ஆடினார், இறைவன் புகழ் பாடினார். தன்னுடைய தவறை உணர்ந்து மனைவியை ஏற்றுக் கொண்டார்.

நடைமுறைக்கு உதவாது என்று நாம் நினைக்கும்படி சில திருக்குறள் இருக்கும். ஆனால் நாம் நினைப்பது தவறு. ஒவ்வொரு திருக்குறளும் இறைவனின் வார்த்தைகள். அது என்றும் பொய்யாகாது. அதனால்தான் இது பொய்யாமொழி என்று சான்றோர்களால் ஆயிரக்கணக்கான வருடங்களாக சொல்லப்படு கின்றது. இப்பச் சொல்லுங்க….

திருக்குறளின் கருத்துக்களை முழு மனதார உணர்ந்து வாழ்ந்தால் சிவனருளைப் பெற முடியும்தானே…!

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt