Category Archives: சுவாமிகள் வரலாறு

தவம் செய்த தவம்

தவம் செய்த தவம் கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் கந்தவேள் எனப்படும் செந்தில் முருகனே- செந்தில் முருகனைச் சிந்தையில் பரவி செகத்தில் வாழ்வோர் அந்தமில் வீடு பேற்றை அடைவர். அண்டங்களைக் காக்கும் ஆண்டவனை இதயப் பிண்டத்தில் இருத்தி வழிபட்டோர் பெருமைக்கு எல்லை ஏது? அதனாலன்றோ கல்வியிற் சிறந்த ஒளவை மூதாட்டி “தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே” என்று வியந்துரைத்தாள். அடியார்கள் வானில் அரசாள்வர் என ஆணையிட்டுரைத்தவர் அன்று திருஞான சம்பந்தர். அப்படிப்பட்ட அடியவர்கள் வரலாற்றை எல்லாம் அறிந்து

முதற் பாடல் முகிழ்த்தது

முதற் பாடல் முகிழ்த்தது ஒரு நாள் பொழுது விடிந்தது. பொற்கோழி கூவிற்று. சீவனோடு சிவமணம் கலந்து மாநுடம் தழைக்க மண்ணும் மலர்ச்சி அடைந்தது அன்று. சுவாமிகள் தென்னந் தோப்பு வாயிலை அடைந்தார். தந்தையார் சென்றிருப்பதை அறிந்து அங்கே நின்று கீழ்வானத்தை நோக்கினார். கையில் உள்ள சஷ்டி கவசம் நூலை பார்த்து தானும் இவ்வாறே பாடிப்பரமனருள் பெற எண்ணம் கொண்டார். செஞ்சுடரோனின் எழுச்சி செவ்வேட்பரமனை நினைவூட்ட சுவாமிகள் வடக்கு முகம் நோக்கி திரும்பி பனையோலையை நறுக்கி எழுத்தாணியை கீறி

சுவாமிகளின் பாடல் தொகையும் பலன்களும்

சுவாமிகளின் பாடல் தொகையும் பலன்களும் 1. முதல் மண்டலம் – குமரகுருதாச சுவாமிகள் பாடல் 2. இரண்டாம் மண்டலம் – திருவலங்கற்றிரட்டு 2 கண்டங்கள் 3. மூன்றாம் மண்டலம் – காசியாத்திரை, பரிபூரணானந்தபோதம், தகராலய ரகசியம் 4. நான்காம் மண்டலம் – சிறுநூற்றிரட்டு, திருத்தலத்தரிசனத்தின் போது பாடிய கட்டளை கலித்துறை, சேந்தன்செந்தமிழ், பத்துப் பிரபந்தம், குமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி, குமாரஸ்தவம், செக்கர் வேள் செம்மாப்பு, செக்கர் வேளிறுமாப்பு, சீவயாதனா வியாசம். 5. ஐந்தாம் மண்டலம் – திருப்பா

சடக்கர உபதேசம்

சடக்கர உபதேசம் நெல் வியாபாரம் ஒரு முகம்மதியரையும் கூட்டாளியாகக் கொண்டு பாம்பனில் தந்தையார் சொற்படி செய்து வருங்கால், அவண் வந்த செவ்வேட் பரமனடியார் சேது மாதவப் பெருமாள் கோயில் அர்ச்சகர் சேதுமாதவ ஐயர் என்பவர் சுவாமிகள் பாடல்கள் எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்துப் படித்து புதுக்கோட்டை வித்துவான் குமாரசாமிப் பிள்ளையிடம் அளிக்க அவர் பார்வையிட்டு பாடல் நயமுடையது, துறவு நோக்கமுடையது, பதிப்பிக்கத் தக்கது எனப் பாராட்டி சாற்றுக் கவியும் வழங்கினார். பின்னர் பாம்பன் வந்து

வடமொழியின் மாண்பு

வடமொழியின் மாண்பு வடமொழியும் தென்மொழியும் நாவலந்தீவு நார்களுக்கு வாய்த்த இரு கண்களாம். இவ்வுண்மை உணராது வடமொழியைத் தூடனை புரிவோர் குமுகாயப் புண்களாம். வடமொழி கல்லாதவரைத் திருஞான சம்பந்தர் “மந்திபோற்றிரிந்து ஆரியத்தொடு செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்” என இழித்துரைத்தல் காண்க. பாம்பன் சுவாமிகள் திருஞானசம்பந்தர் வாக்கிற்கேற்ப வடமொழி கற்று இருகண்களையும் பெற்றார். நமக்கு அதனைச் சொன்னார். திருப்பா நூன் முகத்தில் சுவாமிகள் கூற்று “நமா ஆர்ந்த கடவுளுடைய நாமார்ச்சனத்திற்கும் நாம மந்திர செபத்திற்கும் சத்திபீஜ மணைந்த மந்திர

கனவு கண்டார் “கனவதிகாரம் விண்டார்”- இல்லறமும் நன் மக்கட்பேறும்

கனவு கண்டார் “கனவதிகாரம் விண்டார்”- இல்லறமும் நன் மக்கட்பேறும் சுவாமிகள் வாழ்வில் பல கனவுகள் தோன்றிக் குறிப்பு உணர்த்துகின்றன.இறையருள் பெற்றோர்க்குத் îதான்றும் கனவுகள் பலிக்கும். அஃதில்லார் கானும் கனவுகள் வெறும் கானல் நீராய் மறையும், சுவாமிகள் வாழ்வில் கண்ட கனவுகள்: கனவு1. அழகிய திருமேனிச் சைவர் ஒருவர் தோன்றி இவரை அழைத்துச் சென்று வாழையிலை போட்டு அன்னமும் பாலும் கலந்தளித்து “இதை நீ உண்பாயாக” எனக் கட்டளையிட இவரும் உண்டு மகிழ்ந்தார். அதன்பின் கவிபாடும் ஆற்றல் தன்னுள்

துறவு நசையும் தூயோன் வசையும்

துறவு நசையும் தூயோன் வசையும் சுவாமிகள் துறவு விழைந்து இருக்குங்கால் நண்பர் அங்கமுத்துப்பிள்ளை அவன் வரத் தன் எண்ணத்தை மறைத்து “நாளை நான் பழநிபதி செல்லவுள்ளேன்” எனக் கூறியதும் நண்பர் “மீண்டெப்போது வருவீர்கள்?” என சுவாமிகள் “சொல்ல இயலாது” என்றார். உடனே நண்பர் தடுத்து “இது குமரக் கடவுள் கட்டளையோ? என வினவச் சுவாமிகள் துறவு வேட்ககையால் “ஆம்” எனத் தலையசைத்தார். அடுத்தகணம் சுவாமிகள் விண்ணை நோக்க அங்கே முருகப் பெருமான் முகத்தில் வினைக்குறி தோன்ற “எனது

தலயாத்திரை குமரகோட்டம் காணல்

தலயாத்திரை குமரகோட்டம் காணல் “கால் களாற் பயினென்” என்ற அப்பர் திருவாக்கிற்கேற்பவும். “பெரிய கர்த்தர் வாசஸ்தலத்தைக் கருதி வழி நடவாத காலலின்னகால்” என்று பாடியுள்ளமையாலும் சுவாமிகள் எப்பொழுதும் தலயாத்திரையை மேற்கொண்டார்கள். திருவாலவாய், காளத்தி, திருத்தணிகை, திருவண்ணாமலை என்றும் தலங்களைத் தரிசித்துக் கொண்டு கல்வியிற் கரையிலாத காஞ்சி மாநகர் நண்ணினார்கள். பத்துத்திங்களுக்கு மேல் தங்கி தலவழிபாடு புரிந்தமையால் கையிருப்பு கரைய ஊர் செல்ல எண்ணி சத்திரத்தை கடந்தார்கள். தலையில் வெள்ளை முண்டாசு வெள்ளாடை அங்கி அணிந்த அழகிய இளைஞன்

கார்த்திகை சுவாமிகளோடு சந்திப்பு

கார்த்திகை சுவாமிகளோடு சந்திப்பு “கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” என்பதற்கேற்பவும் “ஙகரம் போல்வார் புகரில் குரவர்” எனும் ஞான வாக்கியத்திற்கேற்பவும் சுவாமிகள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி இது. திருவுத்தர கோசமங் கையில் கார்த்திகைச் சுவாமிகள் எனும் முருக பக்தர் இருக்கிறார் என்பதை அறிந்த சுவாமிகள் அவரைக் காண அவ்வூர் சென்ற பொழுது அவர் மதுரை போந்தனர் என்பதை அறிந்து ஏமாற்றத்துடன் இல்லம் திருப்பினார். பின்னர் சில நாள் கழித்து நாகப்பட்டினம் கடற்கரையில் சுவாமிகள் உலாவிக் கொண்டிருந்த பொழுது காஷாயமணிந்த

பிறப்பையறுக்கும் பிரப்பன் வலசையில்

பிறப்பையறுக்கும் பிரப்பன் வலசையில் “தேடார்ச்சில்வை வாடாத் தெய்வம்” என அருளிய குருநாதர் அதற்குரிய இடமாக வெள்ளலைகள் வீசு கடல் ஓரம் அமைதியான மணற் சூழ்ந்த நெய்தல் நிலச் சிற்றூரான “பிரப்பன் வலசையைத் தேர்ந்தெடுத்தார்” – சுவாமிகள் ஆணைப்படி மயான வெளியில் ஒரு கொட்டகை நிருமிக்கப்பட்டு அதன் நடுவே மனிதர் இருக்கத்தக்க சதுரக் குழியொன்று வெட்டப்பட்டு முள்வேலி நாற்புரமும் நாட்டப்பட்டு மேற்புறத்தில் கதவும் இடப்பட்டன. சுவாமிகள் அக்குழியில் அமர்ந்து முப்பத்தைந்து நாள் தவம் புரிந்தார்கள் ஒருவேளை உணவுமட்டும் உட்கொண்டு.

சென்னை செல்லக்கட்டளை

சென்னை செல்ல கட்டளை சுவாமிகள் துறவு பூண்டபின் மீண்டும் தலயாத்திரை மேற்கொண்டார். பல தலங்கள் சென்று முருகனின் எழிலுருவை வழிபட்டு ஈடில்லா மகிழ்ச்சி கொண்டார். சுவாமிகள் விக்ரக வழிபாட்டைப் பெரிதும் வலியுறுத்தியவர்கள். முதல் மண்டலமாகிய குமரகுருதாசர் பாடலில் அறுபடை வீட்டு அலல்கலில் திருச்செந்திலைப் பாடும் பொழுது. “மெய்யான திருமேனி இலக உருவம் கொண்டு மெய்யருள் பெருக்கியருளும் எண்ணம் உணராத புன் மதத்தர் உருவிலை என்பர் யாகங்கள் உனை விடுவதுண்டோ? இஞ்சிவளை மந்திரமலி செந்திலில் அமர்ந்தஎழில் எந்தையே கந்த

சீவகாருண்யத்தின் சிகரம்

சீவகாருண்யத்தின் சிகரம் சுவாமிகள் ஓர் முறை திருநெல்வேலிச் சிக்க நரசையன் சிற்றூரில் நயினார்ப் பிள்ளை என்பார் இல்லத்தில் தங்கியிருந்தார். அப்பொழுது பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை போன்றோர் சுவாமிகளை சந்தித்து வணங்கி அருளாசி பெற்றனர் என்ற விவரம் வையாபுரிப் பிள்ளை நூலில் காண்க. அவ்வமயம் ஒரு பகலில் வெக்கை தாங்காது வெளிவந்த மூட்டைப் பூச்சியைச் சுவாமிகள் இலாவகமாகச் கையில் எடுத்து அங்குள்ள சிறுவன் கரத்தில் தந்து “வெளியே விட்டுவிட்டு வா” என்றார். அறியாமை கொண்ட அச்சிறுவனோ அம்மூட்டைப் பூச்சியைத்

தில்லையும் விளைந்த தொல்லையும்

தில்லையும் விளைந்த தொல்லையும் சுவாமிகள் மீண்டும் நிட்டை கூடி நிமலன் அருள்பெற சிதம்பர சேத்திரத்தை அடைந்தார். சிதம்பரத்தை அடுத்த பின்னத்தூரைச் சுவாமிகள் தேர்ந்தெடுத்தார்கள். மணிவாசகப்பெருமாள் சிவனருளால் ஊமைப் பெண்ணைப் பேச வைத்த தலம் என்பதால் ஆயின் செவ்வேட் பரமன் விந்தையை யாரறிவார்? செத்துப் பிறந்த இராமனையும் கண்ணணையும் வழிபடும் மால் (மயக்கம்) அடியார்களின் மமதை (ஆணவம்) பின்னப்பட சுவாமிகள் சைவசமய சரபமாய் வெற்றிவாகை சூட விதி சுவாமிகளை அங்கே அழைத்ததுபோலும்? அவ்வூர்ச் சிவநேயர் வ.இரத்தினசாமிப் பிள்ளை மூலம்

சைவ சமய சரபம் ஆனார்

சைவ சமய சரபம் ஆனார் வாயீர்வாள் என வெளியிட்ட நூலுக்கு மறுப்பாக சுவாமிகள் “சைவசமயசரபம்” என்ற நூலை 95 அத்தியாயங்களாக இயற்றிட, அதனைத் திருவனந்தபுரம் N.சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தன் பதிப்புரையுடன் 1908 ஆம் ஆண்டு வெளியிட்டனர். இந்நூலுக்கு முன்னதாகவே சுவாமிகள் மாலிய மறுப்பாக நாலாயிரப் பிரபந்த விசாரம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சுவாமிகள் இந்நூலில் சிவ பரத்துவம் நிறுவ அநேக ஸ்மிருதி புராணேதிகாச பிராமாணர்களைக் காட்டியிருப்பîதாடு பத்து ஆங்கில நூல்களையும் காட்டியிருப்பது அவரது பரந்து

நீதிமன்றத்திலும் நின்றார் வென்றார்

நீதிமன்றத்திலும் நின்றார் வென்றார் இந்நிலையில் இராமாநுச ரெட்டியார் எனும் வைணவர் சீவநிந்தை செய்து வெளியிட்ட ஆபாசப் பத்திரிகையைச் கண்ணுற்ற ஆசிரியர் 1908ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் நாள் தென்னார்க்காடு ஜில்லா மாஜிஸ்திரேட் கனம் நாப் முன்னிலையில் மேற்படியார்கள் மீது வழக்கு தொடர்ந்தார்கள். சைவசமய சரபம் வெளியிட்டமைக்காக திருவனந்தபுரம் ந.சுப்பிரமணிய பிள்ளை மீதும் சுவாமிகள் மீதும் இராமநுசதாசர் எனும் வைணவர் வழக்குத் தொடுத்தார். சுவாமிகள், வழக்கின் பொருட்டு கூடலூர், மஞ்சகுப்பம், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, சோமாசிபாளையம், திருவெண்ணெய்

சந்தமுனிக்குக் குருபூசை கண்டார்

சந்தமுனிக்குக் குருபூசை கண்டார் சுவாமிகள் “அருணகிரிநாதர்” பால் அளவற்ற காதல் கொண்டு அவரையே தம் வழிபடு குருவாக எண்ணித் தம் பாடல் ஈற்றில் எல்லாம் அருணகிரிநாதரை “மண்ணும் வானமும் மெச்சப் பாடினோன்” என்றும் “ஓசைமுனி” என்றும் “சந்தமுனி” என்றும் “தீஞ்சொல் அருணகிரி”, “தௌ்ளறிஞர்” என்றும் ஏற்றியுரைத்து மகிழ்ந்ததோடு தமது ஏக தெய்வ வழிபாட்டுக்கு முன்னோடியாகவும் அருணை முனிவரையே கொண்டார். மேலும் சுவாமிகள் இளமையிற் கூடாவொழுக்கம் பூண்டொழுகினார் என்பதையும் மறுத்து முன்வினையால் அவர் தொழுநோய் பெற்றாரென்றும், அவர் சிற்றின்பத்தை

மகாதேஜோ மண்டலம் நிறுவினார்

மகாதேஜோ மண்டலம் நிறுவினார் சுவாமிகள் சேய்ப்பரமன் (பாலமுருகன்) ஒருவனையே வணங்கும் ஏக தெய்வ வழிபாட்டுக் கொள்கை உடையவர்கள். பல தெய்வ வணக்கத்தைக் கடுமையாகச் சாடிப் பாடியுள்ளார்கள். “நோய்வந்த காலத்திற் பேய்களைக் கும்பிட்டு நோன்மையை மறந்த துஷ்டன்” என்றெல்லாம் மேலும் திருப்பாவில் சுவாமிகள் “இதயாம்பரத்தில் தியானம் ஒரு மூர்த்தி பாவனையிலேயே கூடுமதனாற் பல மூர்த்தி வழிபாடு பந்தமாம்” என்று பகர்ந்துள்ளமை காண்க. அளவிலாத் தேஜோ மண்டல இறைவன் ஒருவனையே ஆசாரத்தோடும் அன்போடும் வழிபடூ உம் அடியார் அனைவரும் எத்தேசத்தாராய்

கால்முறிவா? சூல்முறிவா?

கால்முறிவா? சூல்முறிவா? 1923ஆம் ஆண்டு திசம்பர் திங்கள் 27ஆம் நாள் பகல் சென்னை தம்பு செட்டி வீதியில் சென்று கொண்டிருந்த சுவாமிகள் மீது, நான்கு குதிரைகள் பூட்டிய கோச் வண்டி ஒன்று மோதியது. சுவாமிகளின் இடது கணைக்கால் மீது வண்டிச்சக்கரம் ஏறி நின்றதால் கால் எலும்பு முறிந்து சுவாமிகள் பொதுமருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அவ்வமயம் சுவாமிகட்கு எல்லா உதவிகளையும் திருவல்லிக்கேணி சோதிடர் சுப்பிரமணிய தாசரும், அவரது மனைவி பாப்பாத்தி அம்மாளும் செய்தனர். சுவாமிகள் உப்பு நீத்து உண்டவர்

இருமயில் தோற்றமும் இணையிலாக் காட்சியும் (மயூரவாகனசேவனம்)

சுவாமிகள் சிகிச்சைக்காகப் பொது மருத்துவமனையில் தங்கியிருந்த 11வது நாள் இரவு ஆசிரியர் படுக்கையிலிருந்தபடியே ஓர் அற்புத காட்சி கண்டார். குமாரபகவானின் வாகனமாகிய இரு மயில்கள் மேற்கு திசையிலிருந்து நடனமாடிக் கொண்டு வருகின்றன.

மயூரவாகனசேவனம்

மார்கழி மாதத்துப் பூர்வ பட்சம் பிரதமை தோறும் ஏற்படக் கூடிய இச் சேவனத்தில் விமானத்தின் மிசை விக்கிரகம் இருத்தி வெளியே தூக்கிச் செல்லல் இல்லை. செய்யொணாதது என்பதே எனது துணிபாம். எ

குகசாயுச்சிய நிலை பெறுதல்

சுவாமிகள் தனது சீடருள் ஒருவராகிய பு.சின்னசாமி சோதிடரை அழைத்து “திருவான்மியூரில் நிலம் பார். அது விரைவிலாக வேண்டும்” என்று கட்டளை இட்டார்கள்.. அதன் படியே சோதிடரும் நிலம் வாங்கிப் பதிவு செய்து அணியமாக இருந்தார்கள். குருவாரம் (30.05.1929) காலை 7.15 மணிக்குச் சுவாமிகள் யாருமறியாமலேயே சுவாசத்தை உள்ளுக்கிழுத்தார்கள். அது வெளிவராமல் உந்தியிலேயே எழும்பி அடங்குவதாயிற்று. அந்நிலையே இந்நிலையாக “நண்ணறிய சிவானந்த ஞானவடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசமர்ந்திருந்தார்” எனும் வாக்கிற்கேற்பச் சுவாமிகள் செவ்வேட்பரமனின் சேவடி நிழலில் சேர்ந்து,

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt