​பரம்பொருள் காட்சி

– கயிலைமணி ப.சண்முகசுந்தரம்

அமர்நாத் பனிலிங்க நாதரை தரிசனம் காண சென்ற இதழில் திருச்செந்தூர் முருகனை தரிசனம் பார்த்துவிட்டு ஐந்தாம் நாள் பய ணத்தை தொடர்ந்தோம். ஆத்தூர், முள்ளக் காடு வழியாக தூத்துக்குடியில் உள்ள கலைஞர் அரங்கம் உள்ள புறவழிச்சாலையில் ஒரு பங்களா தோட்டம் உள்ள இடத்தில் தங்கி காலை உணவு பகல் வேல் பூஜையை தொடர்ந்து பகல் உணவு அன்பர்கள் ற்பாடு செய்திருந்தார்கள்.

அன்று இரவு வேப்பலை ஓடையில் இரவு தங்கி ஓய்வு எடுத்தோம். மறுநாள் காலை கடுகு சந்தை சத்திரம் வந்து சேர்ந்து மாலை புறப்பட்டு சிக்கல் சிங்கார வேல் முருகனை தரிசனம் செய்துவிட்டு, அங்குல்ள பஜனை மடத்தில் இரவு தங்கினோம். மறுநாள் காலை ஏர்வாடி வழியாக கீழ்க்கரை வழியில் உள்ள அகத்தியர் மண்டபத்தில் காலையும், மாலை யும் இங்கே தங்கி ஓய்வு எடுத்தோம். வேல் பூஜையும் சிறப்பாக நடைப்பெற்றது.

வழக்கம் போல் காலை 4 மணி அளவில் புறப்பட்டு 4 கி.மீ தூரத்தில் திருப்புல்லாணி ஊரில் ஆதிஜெகந்நாதசாமி திருக்கோயில், பெருமாள் கோயில் அருள்மிகு பத்மாவதி தாயார் ஆண்டாள் சந்நிதானத்தில் தங்கினோம்.

தொடர்ந்து சேது கடற்கரை சென்று நீராடி விட்டு நால்வர் பாடல் பெற்ற உத்தரகோச மங்கை சன்னிதானம் சென்று இறைவனை வழிபட்டோம். தொடர்ந்து வேல் பூஜை அன்னதானம் இரவு இங்கேயே தங்கிவிட்டு மறுநாள் காலை 4 மணி அளவில் புறப்பட்டு மாலை 3 மணி அளவில் ஸ்ரீ பாம்பன் சுவாமி களுக்கு அருள்மிகு முருகப்பெருமான் நேரடியாக காட்சி கொடுத்த ஊரான பிரப்பன் வலசை சென்றடைந்தோம்.

அன்று இரவு ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் மண்ட பத்தில் தங்கி ஓய்வு எடுத்தோம். தொடர்ந்து மறுநாள் காலை புறப்பட்டு மண்டபம் ரயில் நிலையம் பின்புறம் உள் ஸ்ரீ கதிர்காம வடிவேல் முருகன் ஆலயத்தில் காலை 7.30 மணி அளவில் வந்து சேர்ந்தோம். பகல் வேல் பூஜை செய்து தொடர்ந்து ஓய்வு எடுத்தோம்.

இங்கிருந்து 6 கி.மீ தூரத்தில் பாம்பன் சுவாமிகள் ஸ்ரீ முருகப்பெருமான் ஆலயத்தில் தங்கினோம் மாலை 5.30 மணி அளவில் பாம்பன் மேல் பாலத்தில் இருந்து ரயில் செல் வதையும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம். காலை 4 மணி அளவில் புறப்பட்டு 6.30 மணி அளவில் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தோம். கடலிலும் இங்குள்ள 21 தீர்த்தம் நீராடி விட்டு ஸ்ரீ ராமநாதரை சன்னிதானத்தில் சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு ராமேஸ் வரத்தை சுற்றியுள்ள கோயில் ஸ்தலங்களையும் தரிசனம் செய்துவிட்டு முழுநாள் இங்கேயே தங்கி விட்டோம். மறுநாள் மாலையில் வலசையில் இருந்து புறப்பட்டு வழுதூர் என்ற ஊரில் அருள்வொளி விநாயகர் கோயில் சென்று காலை அங்கு தங்கினோம். அருள்வெளி விநாயகர் சிறப்பு என்னவென் றால் விநாயகருக்கு அபிஷேகம் நடைபெறு கிறது ஆனால் ஆடைகள் அணிவதில்லை.

தொடர்ந்து தேவிபட்டினம் வந்து சேர்ந்தோம். பிறகு தேவிபட்டினம் வழியாக தேவகோட்டையில் ஆற்றுபாலம் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த ஊர் ஜமீன்தார் பெருமக்கள் அனைவரும் வந்திருந்து மேள, தாளம் நாதஸ்வர இசையுடன் எங்கள் அனைவரையும் ஊர்வலமாக அழைத்து சென்றது சந்தோஷமாக இருந்தது.

எங்களனைவரையும் அ/மி சுந்தரேஸ்வரர் மீனாட்சி ஆலயத்தில் அர்ச்சனை செய்து தீபாராதனை செய்து எங்களை கந்தசஷ்டி விழா மண்டபத்தில் தங்க வைத்தார்கள். மறுநாள் காலை புறப்பட்டு காரைக்குடியி லிருந்து வேலங்குடி, கோட்டையூர், இங்குள்ள மக்கள் வரவேற்பு, உபசரிப்பு சிறப்பாக நடத்தினார்கள். மாலை 4 மணி அளவில் கானாடுகாத்தான் சென்ற டைந்தோம்.

அன்றைய தானம் இந்த ஊர் பெருமக்கள் மேளதாளத்துடன் குடை, ஊர் பேனருடன் வரவேற்றது எங்களது அனைவருடைய மனமும் நெகிழ வைத்தது. இங்கு இரவு வேல் பூஜை சிறப்பாக நடைபெற்றது. 2-2-2013 அன்று காலை 5 மணிக்கு கானாடுகாத் தானிலிருந்து புறப்பட்டு நேமத்தாள் பட்டி வந்து சேர்ந்தோம். மாலையில் 4 மணி அளவில் புறப்பட்டு புதுக்கோட்டை கோகர்ணம் சரவண மகாலில் திருச்செந்தூர் பாத யாத்திரை அடியார் பெருமக்கள் எங்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பான முறை யில் இரவு உணவு அன்னதானம் அளித்தார்கள்.

(தொடரும்)

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt