Category Archives: கோயில் வரிசை

அருள்மிகு பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவில் வரலாறு

செல்வம் பெருகும் சிறந்த நலம் சேரும் கல்வியும் கண்ணிய மும் கை கூடும்-நல்ல குமரன் திருக்குன்றம் கூடித் தொழுதால் அமர ரென வாழ்வார் அணிந்து -திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் 1958ம் ஆண்டு டிசம்பர் திங்கள் பத்தாம் நாள் நடமாடும் தெய்வமாக நூறு ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் குரோம்பேட்டைக்கு விஜயம் செய்த பொழுது, பங்களா மலை (தற்சமயம் குமரன் குன்றம்) என்றழைக்கப்பட்ட குன்றினைச் சுட்டிக் காட்டி,

திண்டல் கிரி வேலாயுதசுவாமி

குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கு ஏற்ப, மேற்கு மலை தொடர்ச்சி முழுவதிலும் கந்தக் கடவுளாம் குமரக்கடவுள் குடிகொண்டிரு¢கும் திருக்கோவில் களுக்கு பஞ்சமே இல்லை. அவ்வரிசையில், ஈரோடு மாவட்டத்தில், அழகிய ஓர் திண்டு போல் தோற்றம் அளிக்கும் சிறு குன்றின்மேல் அழகிய ஓர் சூழலில் அமைந்துள்ளது.

திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர்

– குகச்சிவமணி புலவர் இரா.சண்முகம் வேத நெறி தழைத்தோங்க, மிகுசைவத் துறைவிளங்க பூத பரம்பரை பொலிய,  புனித வாய் மலர்ந்தருளிய  திருஞான சம்பந்தப் பெருமானும், அலகில் கலைத்துறை  தழைப்ப, அருந்தவத்தோர் நெறிவாழ, உலகில் வரும்  இருள் நீக்கி ஒளி விளங்கு கதர்போல் மலரும் திருநாவுக்கரசர் பெருமானும், தேன்கலந்து பால்கலந்து  செழுங்கனித் தீஞ்சுவை கலந்து, ஊன் கலந்து, உயிர் கலந்து  உவட்டாமல் இனிக்கும் ஒருவாசகமாம், திரு வாசகத்தை அருளிய மணிவாசகப் பெருமானும், வாக்கிற் கோர் அருணகிரியும், பாரனைத்தும் பொய்

எறும்புகளுக்காக தலைசாய்த்த இறைவன்

 – குகச்சிவமணி புலவர் இரா.சண்முகம் கல்லினுள் தேரைக்கும் – கடலினுள் பாசிக்கும் படியளக்கும் பரம கருணா மூர்த்தியாகிய சிவப்பரம்பொருளின் பேரருட் பெருங்கருணையை விண்டு ரைக்க வார்த்தையேது. விண்ணோர்கள் ஏத்தும் – நிறங்கள் ஓர் ஐந்துடைய ஐம் முகச் சிவமாம் – சதாசிவத்தின் – நுதல் வழியில் தோன்றிய அழல்பொறிகள் அறுமுகச் சிவமாகி – சரவணத்து நின்று – கார்த்திகைப் பெண்களின் அரவணைப்பில் தவழ்ந்து  உமாதேவியாரின் திருக்கர மலர்களால் ஒருங்கிணைந்து ஸ்கந்தன் – என்றாகியது. செவ்வேட் பரமனின் திருவடி

ஆருத்ரா கபாலீஸ்வரர் கோயிலில்

ஈரோடு மாநகரின் இதயமாக விளங்கும் மணிக்கூண்டு பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.  திருத்தொண்டீச்சு வரம் என்று புராண காலத்தில் வழங்கப்பட்ட இவ்வாலயம் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. பெரும்பள்ளம், பிச்சைக்காரன் பள்ளம் என்ற இரண்டு ஓடைகளுக்கு இடையே அமைந் துள்ள ஊர் ஆதலின் ஈரோடு (ஈரோடை) என அழைக்கப்பட்டதாகக் கூறுவர். கொங்கு நாட்டில் பல்வேறு சிறப்புடைய சிவாலயங்களும் பாடல் பெற்ற ஸ்தலங்கள் இருந்தபோதும் தேவ சாபத்தால் பிறந்த தேதி முதல் இரட்டையர் பெண்கள் செய்த அதிசய மும் 

கஷ்டங்களை தீர்க்கும் கந்தசுவாமி

செய்யூர் தல வரலாறு: செய்யூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுக்காவாகும். இந்த தாலுக்காவின் தலைமையகமாக செய்யூர் நகரம் விளங்குகிறது. பண்டை நாளில் இவ்வூர் ஜெயம்கொண்ட சோழ நல்லூர் என்றும், வீரராஜேந்திரநல்லூர் என்றும் பெயர் பெற்றிருந்தது என்றும், இது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து செம்பூர் கோட்டத்து புறையூர் நாட்டை சேர்ந்திருந்தது என்றும் கல்வெட்டுக்கள் மூலம் நாம் அறிய முடிகிறது. மேலும் இவ்வூருக்கு சேயூர், செய்கையம்பதி, வளவாபுரி என்ற பெயர்களும் இருந்துள்ளன. செய்யூரை மதுராந்தகம் வழியாக வும், கிழக்கு

நோய் நீக்கி ஆரோக்கியம் தரும் அகத்தீஸ்வரர்

அகத்தீஸ்வரர்: இக்கோயிலின் மூலவருக்கு அகத்தீஸ்வரர் என்று பெயர். இச்சிவலிங்கம் ஓர் சுயம்பு லிங்கம். அகத்தியர் இத்தலத்திறகு வரும் முன்பு இச்சிவலிங்கம் இங்கு அமைந் திருந்தது. எனினும் அகத்தியர் வழிபட்டதால், அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றது.

சென்னையில் வைத்தீஸ்வரம்

பாடல் பெற்றதும் பிணி களை தீர்க்கவல்லதுமான திருத்தலம் வைத்தீஸ்வரன் திருக்கோவில். இதே போன்ற மகிமை உடைய ஒரு கோவில் சென்னையில் உள்ளது. அது தான் பூவிருந்தவல்லி அருள் மிகு தையல்நாயகி சமேத வைத்தியநாதசுவாமி திருக் கோவிலாகும். இத்தலத்தின் சிறப்புகளைக் காண்போம்.

நல்லன எல்லாம் தரும் ஸ்ரீ நாகேஸ்வரர்

அடியேனின் குலதெய்வம் திருத்தணிகை ஸ்ரீ சுப்ரமணியஸ்வாமி. சில ஆண்டுகளாக திருத்தணி சென்று திரும்பி வரும்பொழுது அருகேயுள்ள சில கோயில்களைத் தரிசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். ஒருமுறை அப்படி வரும்பொழுதுதான் திருவள்ளூருக்கரு கில் உள்ள ஈக்காடு என்ற சிற்றூரில் குடிகொண்டுள்ள ஸ்ரீ பஞ்சவர்ணேஸ்வரரைத் தரிசனம் செய்தேன். ஒருமுறை திருத்தணி அருகேயுள்ள ஸ்ரீ வீரட்டானேஸ்வரரை தரிசனம் செய்தேன்.

காசிக்கு நிகரான ஸ்ரீசோழீஸ்வரர் ஆலயம்

சிவப்பரம் பொருளின் பெருங் கருணை யினால் தமிழகத்தில் சைவம் தழைக்க, சமணர்களோடு அனல்வாதம், புனல் வாதம் செய்து, எண்ணாயிரம் சமணர்களையும் கழுவில் ஏற்றி பற்பல அற்புதங்கள் செய்து சைவமும் தமிழும் இரு கண்கள் எனப் போற்றிப் புகழ்ந்து பாடிப் பரமனுக்கு தொண்டு செய்தோர் பல்லாயிரம் பேர் உள்ளனர்.

கணபதி அக்ரஹாரம்

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் சுவாமிமலை திருவையாறு நெடுஞ் சாலையில் உள்ள அய்யம்பேட்டையில் இருந்து வடக்கே சுமார் இரண்டு கி.மீ.தொலைவில் அமைந்துள்ளதும் …

கல்லால சித்தர்

திருவள்ளூரிலிருந்து ஊத்துக்கோட்டை சாலை யின் அருகில் அழகிய சிற்றூராக மிளிர்வது நெய்வேலி கிராமம். பல மாதங்களுக்கு முன்பு சில சிவனடியார்கள் சேர்ந்து தாங்கள் கேள்விப்பட்டது உண்மையா? என்று அறிய நெய்வேலிக்குச் சென்றனர்.

கருணை மழை பொழியும் ஸ்ரீ கைலாசநாதர்

முன்னுரை ஈசன் வீற்றிருக்கும் இடம் ‘கைலாசம்’ என்றும், பெருமாள் வீற்றிருக்கும் இடம் ‘வைகுண்டம்’ என்றும் பக்தர்களால் போற்றப்படுகின்றன. ஈசனின் உறைவிடமான ‘கைலாசம்’ என்ற பெயரையே தன்னுடைய குழந்தைகளுக்கு சூட்டி புண்ணியம் தேடிக் கொண்டவர்கள் அக்காலத்தில் அதிகம். தற்பொழுது நாகரீகம் என்ற பெயரில் மனம் போனபடி பெயர் வைத்து பாவச்சுமையைச் சுமக்கின்றனர். திருநாவுக்கரசு சுவாமிகள் கயிலைமலையின் அடியில் உள்ள ஒரு பொய்கையில் ஈசனின் ஆணைப்படி மூழ்கி எழுந்து திருவையாற்றில் கயிலைக் காட்சியினை கண்டு களித்து ஒரு பதிகம் பாடினார்.

அகிலம் காக்கும் அகத்தீஸ்வரர்

பிரம்மாவின் மகனான கச்சய பருக்கு பன்னிரண்டு மகன்கள். அவர்களில் மித்திரனும், வருணனும் இரண்டு மகன்கள். அவர்கள் இருவரும் மிக நெருக்க மாகப் பழகி ஒரே உடலுடன் இருந்தார்களாம். தேவலோகப் பெண்ணான ஊர்வசியுடன் அவர்களுக்குத் தொடர்பு ஏற்பட்டு, அதன் விளைவாக வந்த கருவை ஒரு குடத்தில் வைத்தார்களாம். சிறிது காலம் கழித்து குடத்தை உடைத்துக் கொண்டு இரு குழந்தைகள் வெளிவந்தன. அக்குழந் தைகளே வசிஷ்டரும் அகஸ்தியரும். குடத்திலி ருந்து பிறந்ததால் அவருக்குக் ‘கும்பமுனி’ என்ற பெயர் ஏற்பட்டது.

கோவையில் ஒரு காளகஸ்தி

‘வேத நெறி தழைத்தோங்க மிகு சைவத் துறை விளங்க’ என்ற பண்டையப் பாட்டு வரிகளுக்கேற்ப, வேதாகமங்களின் வழியே சைவச் செந்நெறி, உலகுக்கு உய்யும் வழி காட்டுகிறது. தென்னாடுடைய சிவ பெருமானை எந்நாட்டவர்க்கும் உரியவராய் வைத்து அருளாளர்கள் வழிபட்டனர்.

சோகங்கள் போக்கும் ஸ்ரீசோமநாதேஸ்வரர்

சந்திரன் வழிபட்ட சிவத்தலங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றில் வேலூர் மாவட்டத்திலுள்ள மஹேந்திரவாடியும் ஒன்று. சந்திரன் வழிபட்ட காரணத்தினால், இத்தலத்திலுள்ள ஈசனின் பெயர் ஸ்ரீ சோமநாதேஸ்வரர்.

  • * Digital Edition (Annual) - Rs.200/-
  • * Digital Edition (Six Issues) - Rs.100/-

    Advt